எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி., கட்டணம் குறைகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

எஸ்.டி.டி.மற்றும் ஐ.எஸ்.டி. தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணம் நிமிடத்திற்கு ரூ. 4 முதல் 12 ரூபாய் வரை குறைக்கப்படுவதாக மத்தியதொலைத்தொடர்பு முறைப்படுத்தும் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தொலைபேசி கட்டண விகிதத்தை மாற்றியமைக்க தொலைத்தொடர்பு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி.அழைப்புகளுக்கான கட்டணம்குறைக்கப்பட உள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட கட்டண விகிதம் அக்டோபர் 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். புதிய கட்டண விகிதம் 2002 ம் ஆண்டு மார்ச் வரைஅமலில் இருக்கும்.

புதிய கட்டண விகிதப்படி, ரூ. 1.20 பல்ஸ் ரேட் உள்ள, 1000 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளில் செய்யப்படும் எஸ்.டி.டி. கால்களுக்கு, நிமிடத்திற்கு ரூ.30-லிருந்து ரூ 25.20 ஆக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 4.80 அளவுக்குக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

அதே போல் அமெரிக்கா உள்பட பிற வெளிநாடுகளுக்கு செய்யப்படும் தொலைபேசி கால்களின் கட்டணம் (ஐ.எஸ்.டி.) நிமிடத்திற்கு ரூ. 12குறைக்கப்படுகிறது. அதாவது நிமிடத்திற்கு ரூ 61.20 ஆக இருந்த கட்டணம் ரூ 49.20 ஆகக் குறைக்கப்படும் என்று தொலைபேசித் துறை அறிவிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+