For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யு.எஸ். ஓபன்: முதல் சுற்றில் ஹிங்கிஸ், செலஸ் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

யு.எஸ். ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குமுன்னேறியுள்ளனர்.

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியுயார்க் நகரில் திங்கள்கிழமை தொடங்கின. நடப்புச் சாம்பியனாக ஆண்கள் பிரிவில் ஆந்த்ரே அகாஸியும், பெண்கள்பிரிவில் வீனஸ் வில்லியம்ஸும் உள்ளனர்.

இந்த ஆண்டும் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முடிவில் இவர்கள் களமிறங்கியுள்ளனர்.

அதே நேரத்தில் தனது 5-வது விம்பிள்டன் பட்டத்தையும், 14-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனை படைக்க களமிறங்கியுள்ளார்மற்றொரு அமெரிக்க வீரர் பீட் சாம்ப்ராஸ்.

மற்றபடி ஆண்கள் பிரிவில் 7 முன்னணி வீரர்களும் பெண்கள் பிரிவில் 8 முன்னணி வீராங்கனைகளும் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவதுசுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆந்த்ரே அகாஸி, பீட் சாம்ப்ராஸ், கஃபெல்நிகோவ், ஹெவிட், ஹென்மன், பிளாக், வெய்ன் பெரைரா, ஸ்குல்லாரி, டாபென்ட்டி, ரியாஸ் உள்ளிட்டோர்வெற்றி பெற்றனர்.

பெண்கள் பிரிவில் ஹிங்கிஸ், வீனஸ் வில்லியம்ஸ், மோனிகா செலஸ், தவுசியாத், சாஞ்சஸ் விகாரியோ, டெஸ்டுட், கோயெட்சர், காப்ரியாட்டி உள்ளிட்ட முன்னணிவீராங்கனைகள் வெற்றி பெற்றனர்.

சைடட், மிர்ஜானா லூசிக் தவிர முன்னணி வீராங்கனைகள் யாரும் தோல்வியைக் காணவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X