For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டார் டி.வி 1 கோடி ... ஜீ டிவி 10 கோடி ...

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஸ்டார் டிவியின் ஸ்டார் நிகழ்ச்சியான கோன் பனாகே கரோர்பதி நிகழ்ச்சிக்குப்போட்டியாக ரூ. 10 கோடி பரிசுப் பணம் கொண்ட புதிய போட்டியை ஜீ டிவிஅறிமுகப்படுத்தியுள்ளது.

செயற்கைக் கோள் ஒளிபரப்பில் பல சேனல்களில் பல புது விதமான நிகழ்சிகள்தினமும் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஜீ டி.வி. புதிதாக ஒவ்வொரு எபிசோடிலும்ரசிகர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு தரக்கூடிய புதிய நிகழ்ச்சியைஅறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல நடிகரான அமிதாப்பச்சன் ஸ்டார் டி.வி.யில் கோன் பனேகா கரோர்பதி என்றநிகழ்சியில் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலளிப்பவர்களுக்கு ஒரு கோடிரூபாய் வரை பரிசளிக்கப்படுகிறது.

இந்த நிகழ்சி ஏற்படுத்திய பரபரப்பும், அதற்கு இருந்த வரவேற்பையும் பார்த்துத்தான்இதே போன்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுகிறது என ஜீ டி.வியின் தலைமை நிர்வாகஅதிகாரி சிங் தெரிவித்தார். புதிய நிகழ்ச்சியின்படி கேட்கப்படும் கேள்விகளுக்குசரியான பதிலளித்தால் 10 கோடி ரூபாய் வரை பரிசு கிடைக்கும் வாய்புள்ளது.

இதேபோல, அந்தாக்ஷரி எனும் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் வழங்கப்படும்பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட உள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட உள்ள புதிய நிகழ்ச்சி எந்த அயல் நாட்டு தொலைக்காட்சியிலிருந்தும் எடுக்கப்பட்டது அல்ல. முழுவதும் இங்கேயேதயாரிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்சி அக்டோபர் மாதம் முதல் துவங்குகிறது.

மக்களின் ஆர்வம் அதிகமாக இருப்பதால் இது போன்ற புது நிகழ்ச்சிகளைஅறிமுகப்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை.

ஜீ டி.வி.மேலும் பல புதிய நிகழ்ச்சிகளை இன்னும் இரண்டு மாதங்களில்அறிமுகப்படுத்த உள்ளதாக சிங் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X