யு.எஸ். ஓபன் டென்னிஸ்: குயர்டன் வெளியேறினார்
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் குஸ்டாவோ குயர்தன் தோல்வியடைந்தார்.
பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்த ஆண்டில் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் முடிவில் அமெரிக்க ஓபனில் கலந்து கொண்ட பிரேஸில் வீரர் குயர்தன்,செவ்வாய்க்கிழமை நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் வெய்ன் ஆர்தர்ஸுடன் மோதினார்.
ஆனால், அந்த ஆட்டத்தில் 4-6, 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் அவர் தோல்வியுற்றார். முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில்,தோல்வியுற்றவர்களில் குயர்தான்தான் ஒரே முன்னணி வீரராவார். அதே நேரத்தில் ராப்டர், இவானிசெவிக், குசேரா ஆகியோரும் தோற்றவர்களில்குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆண்கள் பிரிவில் என்குவிஸ்ட், கோரெட்ஜா, டாட் மார்ட்டின், மைக்கேல் சாங், மார்க் ரோஸட், கிராஜிசெக் உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ், லின்ட்ஸே தேவன்போர்ட், செரீனா வில்லியம்ஸ், மார்ட்டினெஸ், ஹூபர், அன்னா கூர்னிகோவா, டோகிக்போன்றவர்கள் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்னர்.


Click it and Unblock the Notifications
