விற்பனைக்கு வருகிறது வாக்காளர் பட்டியல்
சென்னை:
தமிழக வாக்காளர் பட்டியல் விற்பனைக்கு வருகிறது. யார் வேண்டுமானாலும்வாங்கிக் கொள்ளலாம் என மாநில தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சியினர், சாதிச் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் வாக்காளர்பட்டியல் வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரி வருகின்றனர். அதனடிப் படையில்வாக்காளர் பட்டியலை விற்பனை செய்வது என தமிழக தேர்தல் கமிஷன் முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்ட அறிவிப்புவருமாறு:
வாக்காளர் பட்டியல் என்பது பொது ஆவணம். தனிப்பட்ட நபர்களோ,நிறுவனங்களோ தேவை என்று கேட்டால், பட்டியலை பாகங்களாகவோ,பக்கங்களாகவோ விற்கலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
வாக்காளர் பட்டியலின் ஒரு பக்கத்தின் விலை ஒரு ரூபாய் 20 காசு என்று விலைநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் சி.டி.க்களாகவும் வாக்காளர் பட்டியல் விலைக்கு கிடைக்கும். ஒரு சி.டி.விலை 3 ஆயிரம் ரூபாய். ஒரு லோக்சபா தொகுதிக்குரிய வாக்காளர் பட்டியல் ஒருசி.டி.யில் இருக்கும். மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், மாநகராட்சி கமிஷனர்அலுவலகங்களில் இவை விற்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications