காங்கிரசுடன் கரம் கோர்க்குமா த.மா.கா.?
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பிற கட்சிகளுடன் பேசிக்கொண்டுள்ளன.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, இந்த நிமிஷம் வரை அதிமுகவுடன் உறவு கொண்டுள்ளது. இருப்பினும் அவர்களுக்குள் உறவு இருப்பது போலத் தெரிந்தாலும்கூட வெளியில் அடித்துக் கொண்டுதான் உள்ளனர். இவர்களது கூட்டணி எதற்காக ஏற்பட்டது என்றும் தெரியவில்லை. என்று வரை நீடிக்கும் என்றும்புரியவில்லை.
இந்த நிலையில் திராவிட கழகங்களின் "பழக்கப்படி தாய்க் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும், தமிழ் மாநில காங்கிரஸுக்கும் இடையே கூட்டணிஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி சங்கரநாராயணன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் எந்தக் கட்சியும் தனித்துத்தேர்தலில் நின்று வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும் நிலையில் இல்லை என்றார்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக முன் நிபந்தனை ஏதும் போடப்படுமா என்ற கேள்விக்கு தேர்தலின்போது அது முடிவு செய்யப்படும் என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேற்பார்வையாளர் ராம் நிவாஸ் மிர்தா, வியாழக்கிழமை சென்னைக்கு வந்திருந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் மற்றும் பிற தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தினார். அதன் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போதுதான் கூட்டணி குறித்து சங்கர நாராயணன் கருத்துத் தெரிவித்தார்.
ராம் நிவாஸ் மிர்தா கூறுகையில், தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியை இழந்தது காங்கிரஸ். இப்போது அதை மீண்டும் மீட்கும் உத்வேகத்தில்உள்ளது என்றார்.
அதிமுகவுடன் மோதல், திமுகவுடன் சேருவதற்குத் தயக்கம் என்ற நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது. இதேபோல, காங்கிரஸ்கட்சியும், அதிமுகவுடன் உரசல் போக்கில் இருந்து வருகிறது. எனவே இரு காங்கிரஸும் கரம் கோர்த்து களம் காணலாம் என்ற எதிர்பார்ப்புஎழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications