கம்ப்யூட்டர் பயிற்சி பெறும் காஷ்மீர் கைதிகள்
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள சிறைகளின் நிலையை மேம்படுத்தும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் இப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் பயிற்சியைப் போல் பிறதொழிற்பயிற்சியும் கைதிகளுக்கு அளிக்கப்படுகிறது.
இத் தகவலை மாநில உள்துறைத் துணை அமைச்சர் முஷ்டாக் அகமது லோன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
சிறைகளைச் சீரமைக்கும் திட்டம், கைதிகளின் மறுவாழ்த்வுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் இப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜம்முவில் உள்ள மத்திய சிறையில் இப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கைதிகளில் முதல் பிரிவினர் ஏற்கெனவே கம்ப்யூட்டர் பயிற்சியை முடித்துவிட்டனர்.இரண்டாவது பிரிவினருக்கு இப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிற்பயிற்சியின் கீழ் மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இப் பயிற்சிகள் ஜம்முவில் உள்ள மத்திய சிறை மற்றும் கோட் பால்வால் சிறைகளில் அளிக்கப்படுகின்றன.
விரைவில் ஸ்ரீநகர் மத்திய சிறை, ஹிராநகர், கதுவா, உத்தம்பூர் சிறைகளிலும் இப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
கம்ப்யூட்டர் மற்றும் தொழிற்பயிற்சிகளில் சேர கைதிகளிடையே நிறைய ஆர்வம் உள்ளது. சிறைக் கைதிகளின் நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்துமுயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
பல சிறைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாரமுல்லா சிறை சீரமைக்கப்பட்டு அங்கு குடிநீர்வசதியும் கழிவு நீர் வெளியேற்றும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளன.
மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளில் கைதிகளுக்குத் தக்க மருத்துவ உதவி கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்லோன்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications