துவங்கியது நாகூர் கந்தூரி விழா
நாகூர்:
பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா தொடங்கியது.
நாகையில் இருந்து புதன்கிழமை ஊர்வலமாக நாகூருக்கு எடுத்து வரப்பட்ட கொடி தர்காவில் ஏற்றப்பட்டது. 8-ம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலம்நடக்கிறது.
முஸ்லிம்களின் பிரசித்தி பெற்ற புனித தலங்களில் ஒன்றான நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த விழா.
கொடியேற்ற நிகழ்ச்சியைக் காண தர்காவின் முன்புறம் மற்றும் தர்காவைச் சுற்றியும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குழுமியிருந்தனர். கொடியேற்றநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவ்தாஸ்மீனா கலந்துகொண்டார்.
நூற்றுக்கணக்கான போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகின்ற 8-ம் தேதி,நாகை நீலயதாட்சியம்மன் கோவில் அருகே இருந்து புறப்படும்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். லட்சக்கணக்கில் பக்தர்கள்திரளுவார்கள். 12-ம் தேதி இரவு 8 மணிக்கு கொடி இறக்கப்பட்டு அன்றுடன் விழா முடிவடையும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications