கூடை பின்னியதில் ஒரு உலக சாதனை
Subscribe to Oneindia Tamil
வார்சா (போலந்து):
போலந்து நாட்டைச் சேர்ந்த கூடை பின்னுபவர்கள், எட்டு மீட்டர் உயர கூடை பின்னி, கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் பணியாற்றியதன் விளைவாக இந்த சாதனைக் கூடை தயாரானது. உலக சாதனை படைத்த கூடையின் உயரம் 8 மீட்டர்.சுற்றளவு 9 மீட்டர். இதற்கு முன் அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் 10ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஒரு கூடைதான் உலக சாதனைபடைத்ததாக இருந்தது.
மேற்கு போலந்தின் நோவி டாம்சில் என்ற நகரில் இந்த உலக சாதனை படைத்த கூடை பின்னப்பட்டது. இந்தக் கூடையின் உச்சியில் இரண்டு மெழுகுவர்த்திகளை வைக்க கூடை பின்னியர்கள் முடிவு செய்துள்ளனர்.
பின்னிட்டீங்கப்பா...!












Click it and Unblock the Notifications