இன்டர்நெட்டில் தமிழக அரசு ஆணைகள்
- சோ
அரசியல் சட்ட 370-வது பிரிவு இது தற்காலிகமானது என்று சொல்லியே கொண்டுவரப்பட்டது; அரசியல் சட்டமும் அதையே கூறுகிறது.அப்படியிருக்க, அது போக வேண்டும் என்று கூறுவது விடத்தக்க நிலை அல்ல.
அது போக வேண்டிய ஷரத்துத்தான்; மற்ற சில மாநிலங்களுக்கும் தவறான முன்னோடியாக அமைகிற இந்த ஷரத்து போகிற நாள் நல்ல நாள். ஆனால்இதில் அவசரப்பட்டும் பயனில்லை.
காஷ்மீரில் முதலில் அமைதி ஏற்பட வேண்டும். அது விரைவில் நடக்கக் கூடிய காரியம் அல்ல. ஆகையால், 370 நீக்கம் விட வேண்டிய கோரிக்கையும்அல்ல. அது சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டிய நல்ல காரியம்.
370 ஆவது ஷரத்து போக வேண்டும் என்று கூறுவதே மைனாரிட்டி விரோதச் செயல் என்ற நினைப்பு, மைனாரிட்டி மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுநம்பிக்கையையே சந்தேகிக்கிற அணுகுமுறை. அதுதான் உடனடியாக விடப்பட வேண்டும்.
பொது சிவில் சட்டத்தைப் பொறுத்தவரையில், அரசியல் சட்டத்தினாலேயே பரிந்துரை செய்யப்பட்டிருக்கிற விஷயம் அது. ஆனால் இது முஸ்லிம் சமுதாயத்தினர்சம்மதத்தோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விஷயம். திணிக்க முடியாது; திணிக்கப்படக் கூடாது. அவசரமும் இல்லை.
ஆகையால் இம்மூன்று விஷயங்களில், ராமர் கோயிலை விட்டுவிட்டு, மற்ற இரண்டையும் உடனடி நிர்பந்தங்களாக வற்புறுத்தாமல் இருந்தாலே போதும்- என்கிற தெளிவு பா.ஜ.க.வுக்கு வர வேண்டும்.
மூன்றாவது ஒரு விஷயமும் பா.ஜ.க.வின் புதிய தலைவரால் பேசப்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸை கொஞ்ச காலம் கழித்து அலட்சியப்படுத்துவோம்என்பதுதான் அது. இப்படி அவர் பேசியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைச் செய்தி மட்டுமே கூறுகிறது.
மற்ற எந்தப் பத்திரிக்கையிலும் இப்படி செய்தி இல்லை. ஆனால், பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். உறவை வலியுறுத்தி பிரதமர் பேசியிருக்கிறார் - இச் செய்திஎல்லா பத்திரிக்கைகளிலும் வந்திருக்கிறது. அதுதான் உண்மை நிலையும் கூட.
ஆர்.எஸ்.எஸ். முக்கியஸ்தர் ஒருவர் சொன்னார்:
ஆர்.எஸ்.எஸ். மரம்; பா.ஜ.க. அதில் கட்டப்பட்டிருக்கும் மாடு; அது மரத்தைச் சுற்றும் போது, சில சமயங்களில், கயிற்றின் நீளம் காரணமாக அதுமரத்தை விட்டு விலகிப் போகிற மாதிரி தெரியும்; ஆனால் அதுவே எதிர் திசையில் சுற்றி மரத்தை நெருங்கி வந்து நிற்கும் என்றார். இதுதான் உண்மைநிலை.
இதையே வேறு விதமாகவும் பார்க்கலாம். ஆர்.எஸ்.எஸ்.- தகப்பன்; பா.ஜ.க.- மகன். தகப்பனின் ஆசாரங்கள், அலுவலகத்திற்கு போகும்மகனுக்கு ஒத்து வராது; அவனுக்கு இன்றைய நாகரிக அணுகுமுறைகள் தேவைப்படும். இதைத் தகப்பன் உணர்ந்து, கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும்.
அதே சமயத்தில், தகப்பன் சேர்த்து வைத்த சொத்தும் (ஆதரவு), மகனுக்கு நிச்சயம் தேவை; அது இல்லாவிட்டால் மகன் திண்டாடிப் போய் விடுவான்;இதை உணர்ந்து மகன் நடந்து கொள்ள வேண்டும்.
தகப்பன் அறிவுரை கூறலாம்; அலுவலகத்தில் தலையிடக் கூடாது. மகன் சுயமாக இயங்க வேண்டும்; தகப்பனாரின் அனுபவ அறிவைப் புறக்கணித்து விடக்கூடாது.
இம்மாதிரி ஓர் ஏற்பாடு உருவாகி வருவதாகவே தெரிகிறது. பா.ஜ.க.வின் அரசியல் முதிர்ச்சிக்கு இது நல்லது. இரு கட்சி ஆட்சி முறைக்கும் நாளடைவில்இது வழி செய்யக் கூடும் எனபதால், நாட்டுக்கும் இது நல்லது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!











Click it and Unblock the Notifications