"ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன்தான் கூட்டணி"
திருச்சி:
ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று தமிழ்தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன் தெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ் தேசம் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கட்சியின் முதல் மாநில மாநாடு திருச்சியில் அக்டோபர் 14-ம் தேதிநடைபெற உள்ளது.
முதல் மாநாடு நடைபெறும்போது கட்சியில் 40 லட்சம் பேர் உறுப்பினர்களாகஇருப்பார்கள். அதற்கேற்ப வகையில் எங்களது கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும்பணி நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் பிகார் முதல் ராப்ரி தேவி, அவரது கணவர் லல்லு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்பட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இம் மாதம் 17-ம் தேதி மதுரையில் தென் மண்டல மாணவர் மாநாடு நடத்த உள்ளோம்.18-ம் தேதி திண்டிவனத்திலும், 29-ம் தேதி கடலூரிலும் மாவட்ட மாநாடுகள்நடத்தப்படும்.
இப்போது உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள எந்த கூட்டணியிலும் ஒற்றுமைஇல்லை. தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றுஇப்போதைக்கு சொல்லமுடியாது.
முதல் மாநில மாநாடு நடத்தி எங்கள் பலத்தை நிரூபித்த பிறகு அரசியல் சூழ்நிலைக்குஏற்ப கூட்டணி பற்றி முடிவு செய்வோம். அதே நேரத்தில் ஆட்சியில் பங்குகொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்வோம்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால்தான் எல்லா சமுதாயத்தினருக்கு சுமுக முடிவுகாண முடியும் என்றார் கண்ணப்பன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications