"உச்சநீதிமன்றத் தடையால் வீரப்பன்-கோபால் பேச்சு பாதிக்கப்படாது"

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையால் சந்தனக் கடத்தல் வீரப்பன் - நக்கீரன்கோபால் இடையேயான பேச்சுவார்த்தை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றுகர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கவுடா தெரிவித்தார்.

பெங்களூரில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்று33 நாட்கள் ஆகிவிட்டன.

ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக வீரப்பனுடன் நக்கீரன் கோபால் பேச்சு நடத்திவருகிறார்.

ராஜ்குமாரையும் மற்றவர்களையும் விடுவிக்க சில கோரிக்கைகளை வீரப்பன்தெரிவித்திருந்தான். கர்நாடக சிறைகளில் உள்ள 51 தடா கைதிகளையும்விடுவிக்கவேண்டும் என்பதும் வீரப்பனின் கோரிக்கைகளில் ஒன்று.

அந்த கோரிக்கையை ஏற்று தடா கைதிகள் 51 பேரையும விடுவிக்க கர்நாடக அரசுஉத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனால், 51 தடா கைதிகளும் விடுதலை ஆக முடியாமல் உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இத் தடையால் 3-வது முறையாக காட்டுக்குள் சென்று வீரப்பனுடன்நக்கீரன் கோபால் நடத்தி வரும் பேச்சுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
நீதிமன்ற விவகாரத்தை கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் கவனித்துக் கொள்ளும்.உச்சநீதிமன்ற உத்தரவின் முழு விவரத்தையும் கர்நாடக அரசு எதிர்பார்த்துள்ளது. முழுவிவரங்கள் கிடைத்த பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.

உச்ச நீதிமன்றத்தின் தடையால் ராஜ்குமார் விடுதலை ஆவது தாமதமாகிறதுஎன்றாலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடக அரசு கீழ்படிகிறது என்றார் சந்திரேகவுடா.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+