கர்நாடக அரசு ராஜிநாமா செய்யவேண்டும் - உச்ச நீதிமன்றம்
டெல்லி:
வீரப்பன் கூட்டாளிகள் 115 பேரையும் விடுதலை செய்வதற்கு ஏற்கெனவே பிறப்பித்ததடை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
நீதிபதிகள் எஸ்.பி. பரூசா, பி.பி. மொஹபத்ரா, ஒய்.கே. சப்பர்வால் ஆகியோர்கொண்ட பெஞ்ச் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
மறு உத்தரவு வரும்வரை ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடரும் என்றுநீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
இதையடுத்து வீரப்பன் பிடியில் உள்ள கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரின்விடுதலை மேலும் தாமதமாகியுள்ளது.
திறமையில்லாத கர்நாடக அரசு ராஜிநாமா செய்யவேண்டும்
வீரப்பனின் கூட்டாளிகள் 115 பேரையும விடுதலை செய்ய பிறப்பிக்கப்பட்டதடையை மேலும் நீட்டித்த உச்ச நீதிமன்றம், திறமையில்லாத கர்நாடக அரசு ராஜிநாமாசெய்யவேண்டும் என்று கூறியுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க கடந்த 8 ஆண்டுகளாக கர்நாடக அரசு எந்தஉருப்படியான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. கர்நாடக அரசுக்குத்திறமையில்லாததுதான் இதற்குக் காரணம்.
கையாலாகாத கர்நாடக அரசு உடனே பதவி விலகவேண்டும். வேறு ஒரு அரசுபதவிக்கு வந்து வீரப்பனைப் பிடிக்க அனுமதிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றநீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்ட சகீல் அகமதின் தந்தை அப்துல் கரீம் தாக்கல் செய்ய சிறப்பு மனுவைஏற்றுக் கொண்டு இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள வீரப்பனின் கூட்டாளிகள் 115 பேரையும் விடுதலை செய்யஅனுமதிக்கக்கூடாது என்று அந்த மனுவில் அப்துல் கரீம் கூறியிருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரு மனுக்களையும்ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மூன்று மனுக்கள் மீதும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications