காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் உட்பட 5பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த வ்ெவேறு சம்பவங்களில் மூன்றுதீவிரவாதிகளும், ஐந்து பொதுமக்களும் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்தனர்

வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீநகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பராங் என்றஇடதிலுள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கைவெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.

ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டை வெள்ளிக்கிழமை இரவுமுழுவதும் தொடர்ந்தது. இதில் வெளிநாட்டு தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூன்றுபேர் கொல்லப்பட்டனர்.

இதே சண்டையில் ஒரு பாதுகாப்புத் துறை அதிகாரியும், இரண்டு அப்பாவிப்பொதுமக்களும் காயமடைந்தனர். காயமடைந்த இரு பொதுமக்களில் ஒருவர் சனிக்கிழமைகாலை மருத்துவமனையில் இறந்து விட்டார்

கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து 3 ஏ.கே. துப்பாக்கிகள், 9 பத்திரிகைகள்ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள அனந்த்நாக் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலைதீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நடந்த மற்றொரு சண்டையில் ஒருஇளநிலை ராணுவ அதிகாரியும் நான்கு பொதுமக்களும் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். ஆனால்தீவிரவாதிகள் தப்பிச் சென்று விட்டனர்.

பாதுகாப்புப் படை வீரர்கள், பாரமுல்லா மாவட்டதின் அஜாஸ் என்ற இடத்திலிருந்துதீவிரவாதி என சந்தேகப்படும் மஜீத் கான் என்பவரை கைது செய்துள்ளனர் என ராணுவவட்டாரங்கள் தெரிவித்தன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+