ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு ... பதக்கம் கிடைக்குமா?
டெல்லி:
சிட்னியில் இம் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் நிஷா மில்லெட் மட்டுமே கலந்து கொள்கிறார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இம் மாதம் 15-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் 116 பேர் கொண்ட இந்திய அணி கலந்துகொள்கிறது.
நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் ஒரே ஒருவர்தான் கலந்து கொள்கிறார். அவர் பெங்களூரைச் சேர்ந்த நிஷா மில்லெட். இவர் 200 மீட்டர் பிரீஸ்டைல்பிரிவில் கலந்து கொள்கிறார்.
இப்போது என்னுடைய விருப்பம் எல்லாம் 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவேண்டும் என்பதுதான். அதுவே மிகவும்கடினமானது என்கிறார் நிஷா மில்லெட்.
சிட்னி ஒலிம்பிக்குக்குப் பயிற்சி பெறும் நோக்கில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் அவர் பயிற்சி பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே சிறந்த நீச்சல் பயிற்சியாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் பெர்னீ முல்ராய், நிஷா மில்லெட்டுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.
ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற 200 மீட்டர் (பிரீஸ்டைல் பிரிவு) தூரத்தை 2 நிமிடம் 07.07 விநாடிகளில் கடக்கவேண்டும். ஆனால், நான் 2 நிமிடம்06.62 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தகுதி பெற்றுள்ளேன்.
ஆஸ்திரேலியாவில் பெற்ற பயிற்சியின்போது எனது நேரத்தை 2 நிமிடம் 06.00 விநாடிகளாகக் குறைத்துள்ளேன். ஒலிம்பிக்கில் நிச்சயம் நான் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவேன் என்று நம்புகிறேன் என்றார் நிஷா மில்லெட்.
ஒலிம்பிக்கில் நிஷா மில்லெட் நிச்சயம் 2 நிமிடம் 05.00 விநாடிகளில் 200 மீட்டர் தூரத்தை நீந்திக் கடப்பார் என்று நம்புவதாக தேசிய நீச்சல் பயிற்சியாளர்கேவி. சர்மா தெரிவித்தார்.
சிட்னி ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் 50 பேர் போட்டியிடுகின்றனர். அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற முதல் 16 பேரில் ஒருவராகவரவேண்டும்.
இப்போதுள்ள நேரத்தை விட 2 அல்லது 3 விநாடிகள் குறைவாக 200 மீட்டர் தூரத்தை நிஷா மில்லெட் கடந்துவிட்டால் போதும் அரையிறுதி மட்டுமல்லஇறுதிச் சுற்றுக்கே தகுதி பெறலாம் என்றார் சர்மா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications