பிரா திருடிய பிரேசில்காரர் கைது

Subscribe to Oneindia Tamil

ரியோ டிஜெனிரோ:

பெண்களின் உள்ளாடைகளைத் திருடுவதில் ஸ்பெஷலிஸ்ட் நபர் ஒரு வருடத்தேடலுக்குப் பின் போலீஸாரிடம் சிக்கினார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த நபர் பெண்களின் பிரா, பேன்டிஸ் எனஉள்ளாடைகளை மட்டும் குறி வைத்துத் திருடுவது வழக்கம். இவரது பெயர் வான்டர்லிவியரா (34). இவர் ஒரு விவசாயி. பிரேசின் தெற்குப் பகுதியில் உள்ள பேக்ஸிமால்என்ற ஊரைச் சேர்ந்தவர்.

பேக்ஸிமால் நகரில் அடிக்கடி பெண்களின் உள்ளாடைகள் திருடுபோவதாகபோலீசுக்குப் புகார்கள் வந்தன. இதுகுறித்து போலீஸார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டு வந்தனர். ஒரு வருடமாக இது தொடர்ந்தது.

இந்த நிலையில், வியரா, ஒரு துணிக் கடையில் பெண்களின் உள்ளாடைகளைதிருடும்போது போலீஸாரிடம் மாட்டிக் கொண்டார். அவரிடம் நடத்தியவிசாரணையில் பெண்களின் உள்ளாடைகளைச் சேகரிப்பது தனது பொழுதுபோக்குஎன்றார். பேக்ஸிமால் நகரில் காணாமல் போன பல பிராக்கள், பேன்டிஸ்கள் தனதுவீட்டில்தான் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருடியோ அல்லது வாங்கியோ அவற்றை தனது வீட்டில் வியரா சேகரித்துவந்துள்ளார். வியரா வீட்டில் நடத்திய சோதனையில் 250 ஜோடி பிராக்கள்,பேன்டிஸ்கள் இருந்தது தெரிய வந்தது.

வியரா தனது பொழுதுபோக்குக் குறித்துக் கூறுகையில், பெண்களின் உள்ளாடைகளைசேகரிப்பது எனது பொழுதுபோக்கு. குறிப்பாக பக்கத்து வீடுகளில் வசிக்கும்பெண்களின் உள்ளாடைகளையே அதிகம் திருடியுள்ளேன் என்றார்.

பேக்ஸிமால் நகரில் மொத்தம் 20,000 பேர் வசிக்கின்றனர். தற்போது வியராஅப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார். 2 ஆண்டு சிறைத் தண்டனைவியராவுக்குக் கிடைக்கும் என்று தெரிகிறது.

வியராவிடம் தங்களது உள்ளாடைகளைப் பறிகொடுத்த பல பெண்கள் இதுகுறித்துக்கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+