வீரப்பனின் ரகசிய கேசட்டுடன் பெங்களூர் வந்தார் ரஜினி
பெங்களூர்:
வீரப்பனின் ரகசிய கேசட்டுடன் நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் வீட்டுக்கு சனிக்கிழமை வந்து அவரது குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.
இந்தக் கேசட்டில், வீரப்பன் ரூ. 50 கோடி பணமும், 51 தடா கைதிகளை விடுதலைசெய்யவும் கோரியுள்ளான். இதற்கு செப்டம்பர் 11-ம் தேதி வரை கெடுவும்விதித்துள்ளான்.
வீரப்பன் 50 கோடி கேட்டதாக வதந்தி நிலவி வந்தது. தற்போது அது கிட்டத்தட்டஉறுதியாகி விட்டது.
வீரப்பனின் இந்த ரகசிய கேசட், வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதியிடம்வந்து சேர்ந்ததாகத் தெரிகிறது.
வீரப்பனிடமிருந்து வந்த பல கேசட்டுகளை தமிழக அரசும், கர்நாடக அரசும்வெளியிட்டுள்ளன. சில கேசட்டுகளை பகிரங்கப்படுத்தவில்லை. அதில் ஒன்றுதான் இந்தகேசட். கேசட்டில் கடுமையான கோரிக்கைகள் இருந்ததால், அதை ராஜ்குமார்குடும்பத்திடம் கொடுக்க ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ராஜ்குமார் வீட்டுக்கு ரஜினிகாந்த் திடீர் என்றுவந்தார். அங்கு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, மகன்களுடன் ஆலோசனைநடத்தினார். பின்னர் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப்பேசினார்.
ராஜ்குமார் வீட்டில் நடந்த சந்திப்பின்போது வீரப்பன் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டரகசிய கேசட்டை ராஜ்குமார் குடும்பத்திடம் ரஜினி கொடுத்துள்ளார். கேசட்டைக் கேட்டராஜ்குமார் குடும்பத்தின் பதற்றம் அடைந்ததாகவும் தெரிகிறது.
இந்த சமயத்தில், பிரபல மது தயாரிப்பு நிறுவனமான கோடேஸ் நிறுவனத்தின்உரிமையாளர் ஹரீஷ் கோடே அங்கு வந்தார். வீரப்பன் ரூ. 50 கோடி கேட்டுள்ளதாககூறப்படும் நிலையில், தொழிலதிபர் ஹரீஷ் கோடே ரஜினிகாந்த் முன்னிலையில்,ராஜ்குமார் குடும்பத்தாருடன் பேச்சு நடத்தியது பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ரஜினிகாந்த் கொண்டு வந்துள்ள கேசட்டில் உள்ள கோரிக்கைகள்:
1.51 தடா கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
2.பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.
3.அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் சதாசிவ கமிட்டியின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.
இதுதொடர்பான அரசின் முடிவுகள் உடனடியாக ரேடியோ மூலம் அறிவிக்கப்படவேண்டும் என்று கேசட்டில் உள்ளதாகத் தெரிகிறது.
செப்டம்பர் 11-ம் தேதிக்குள் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும்வீரப்பன் கெடு விதித்துள்ளதாகத் தெரிகிறது.
நக்கீரன் கோபாலுக்கும் எச்சரிக்கை?
மேலும், வெறும் தபால்காரர் வேலையை மட்டும் செய்தால் போதும் என்றும் வேறு எதுவும்பேசக் கூடாது என்றும் வீரப்பன் தரப்பிலிருந்து தமிழ் மீட்சிப் படையைச் சேர்ந்த மாறன்,நக்கீரன் கோபாலுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக திருவள்ளுவர் சிலையை ஜனவரி 15-ம் தேதி திறக்கலாம் என்று தமிழகமுதல்வர் கருணாநிதி முன்பு யோசனை தெரிவித்திருந்தார்.
தற்போது வீரப்பன், செப்டம்பர் 11-ம் தேதி வரையே கெடு விதித்துள்ளான்.
வீரப்பனுக்கு தீவிரவாதி மாறன் உத்தரவுகள் பிறப்பிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தீவிரவாதிகளின் கைப் பொம்மையாக வீரப்பன் மாறிவிட்டதாக தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications