ஐரோப்பாவுக்கு 40 ஆயிரம் சாம்சங் கலர் டி.விக்கள் ஏற்றுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 40 ஆயிரம் சாம்சங் போர்ட்டபிள் கலர் டிவிக்கள் சனிக்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டன.
14 இன்ச் அளவில் 4 மாடல்களில் இந்த டிவிக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டில் மட்டும் 60 ஆயிரம் டிவிக்களை ஐரோப்பிய நாடுகளுக்குஏற்றுமதி செய்யவேண்டும் என்று சாம்சங் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கின் முதற்கட்டமாக இப்போது 40 ஆயிரம் டிவிக்கள் சனிக்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டன. அடுத்த ஆண்டு 2 லட்சம் டிவிக்களைஏற்றுமதி செய்ய சாம்சங் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டில் 5.5 லட்சம் கலர் டிவிக்களை விற்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications