கோவையில் விநாயகர் ஊர்வலம் நடத்தலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவையில் விநாயகர் ஊர்வலம் நடத்தத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தடை கோரி தாக்கல் செய்யப்பட்டமனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவையில் விநாயகர் ஊர்வலம் நடத்த தடை விதிக்கவேண்டும் என்று தமிழ்நாடு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கே. ராமகிருஷ்ணன், சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு விவரம்:

அமைதியான நகரமாக இருந்த கோவையில் சில ஆண்டுகளுக்கு முன் தொடர் குண்டுகள் வெடித்தன. இதனால், 100-க்கும் மேற்பட்டவர்கள்பலியானார்கள்.

இச் சம்பவத்துக்குப் பிறகு பெரும் பதற்றத்தில் இருந்த கோவை நகரத்தில் இப்போதுதான் மீண்டும் அமைதி திரும்பியுள்ளது. இந் நிலையில், செப்டம்பர் 5-ம்தேதி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி வழியே ஊர்வலம் செல்ல அனுமதியளித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். ஆகவே, ஊர்வலத்துக்குத் தடைவிதிக்கவேண்டும் என்று மனுவில் ராமகிருஷ்ணன் கூறியிருந்தார்.

இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே. ஜெயின், ரவிராஜ் பாண்டியன ஆகியோர் விநாயகர் ஊர்வலத்துக்குத் தடை விதிக்கமுடியாது என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+