ஏற்றுமதிப் போட்டியைச் சந்திக்க மொரீஷியஸ் அழைப்பு
திருப்பூர்:
எதிர்காலத்தில் ஏற்படும் ஏற்றுமதி போட்டியைச் சமாளிக்க, இந்திய ஆயத்த ஆடைநிறுவனங்கள் மொரீஷியஸ் நாட்டில் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் எனதிருப்பூருக்கு வருகை தந்துள்ள மொரீஷியஸ் நாட்டு ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலஇணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூரில், மொரீஷியஸ் நாட்டு ஏற்றுமதி மேம்பாட்டு மண்டல இணை இயக்குநர்பீடாசி நிருபர்களிடம் கூறியதாவது:
மொரீஷியஸ் நாட்டில் ஆயத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பு பெருகி வருகிறது.இந்த நாட்டில் மலிவான விலையில் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்ய முடியும்என்ற நிலை உருவாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சஹாரா சார்பு பகுதிகளிலிருந்து அமெரிக்கா ஆயத்தஆடைகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இப்பகுதியிலிருந்து இதற்காக 70நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் மொரிஷியஸ் தீவும் தேர்வு பெற்றுள்ளது.
மொரீஷியஸிலிருந்து அமெரிக்கா, தென் அமெரிக்கா, போன்ற நாடுகள் இறக்குமதிசெய்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமைகிறது. ஆனால், இந்த நாடுகள் ஒருநிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனையின் படி அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காநாடுகளிலிருந்து மொரீஷியஸ் மூலப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளவேண்டும்.
இந்தியாவால் வேகமாக உற்பத்தி செய்ய முடியும். இந்தியாவிடம் தேவையான மனிதசக்திகள் உள்ளன. இதுதான், மொரீஷியஸிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஆயத்தஆடை உற்பத்தியில் உள்ள ஒரே வேறுபாடு.
எனவே, இந்தியா, குறிப்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்களது ஏற்றுமதியைபெருக்கிக் கொள்ள மொரிஷியஸ் தீவில் தொழிற்சாலையை அமைக்கலாம். இதன்மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் சர்வதேச போட்டியில் எளிதாக வெற்றி பெறமுடியும்.இல்லையென்றால், ஏற்றுமதியில் பின்தங்கிய நிலை ஏற்படும்.
அமெரிக்காவிற்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய உறுதியான நிலையைகொண்டிருந்தாலும், இதற்கு கடும் போட்டியாக மொரீஷியஸ் தீவு விளங்கும் என்றார்அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications