பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
பெங்களூர்:
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பால் கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து மீட்பதில்ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விவாதிப்பதற்காக இன்று (திங்கள்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைகர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா கூட்டியுள்ளார்.
51 தமிழ் தடா கைதிகளை மைசூர் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற வீரப்பனின் கோரிக்கையைநிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தையும்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே போல வீரப்பனின் கோரிக்கையை ஏற்று 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்கத் திட்டமிட்டிருந்த தமிழகஅரசின் முயற்சிகளுக்கும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீவிரவாதிகளை விடுவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் ஆதர்ஷ், வதேரா என்ற 2 டெல்லிவழக்கறிஞர்கள் பொது நல வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தமிழகஅரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், தமிழகமும் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.
இதனால், மொத்தத்தில் ராஜ்குமாரை மீட்கும் முயற்சிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இரு அரசுகள் சார்பிலும்வீரப்பனுடன் பேச்சு நடத்தி வரும் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் மூன்றாவது முறையாக காட்டுக்குள்சென்றுள்ளார். கடந்த 1 வாரமாக அவர் காட்டில் தான் உள்ளார்.
இந் நிலையில் ராஜ்குமார் கடத்தப்பட்டு 35 நாட்கள் ஆகிவிட்டன. கர்நாடகத்தில் பல கன்னட அமைப்புகளும்அமைதி இழக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பெங்களூர், மைசூர் உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளில்வசிக்கும் தமிழர்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் கண்டனம், ராஜ்குமாரை மீட்பதில் முன்னேற்றம் இல்லாமை ஆகிய பிரச்சனைகள் குறித்துஎதிர்க் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் கிருஷ்ணா. அதற்கு முன்னதாக அமைச்சரவைக்கூட்டத்தைக் கூட்டி விவாதம் நடத்தி வருகிறார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications