காளிமுத்து என் அண்ணன் என்கிறார் அந்தர்பல்டி இளங்கோவன்
ஈரோடு:
காளிமுத்துவுக்கும், எனக்கும் இடையே நடப்பது அண்ணன்--- தம்பி சண்டைதான். காங்கிரஸ், அ.தி.மு.க கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.
வீரப்பன் விவகாரத்தில் தெருச் சண்டை லெவலுக்கு இறங்கி வந்து ஏட்டிக்குப் போட்டி அறிக்கை விட்டு வந்தனர் அதிமுக அவைத் தலைவர் காளிமுத்துவும்,மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும்.
இளங்கோவனை திட்ட காளிமுத்து மட்டும் போதாது என்று அதிமுக மகளிர் அணித் தலைவியாக உள்ள இளங்கோவானின் தாயார் சுலோச்சனா சம்பத்மூலமும் திட்டறிக்கை விடச் செய்தார் ஜெயலலிதா.
இந் நிலையில் சிம்மாசனம் விஜயகாந்த் ரேஞ்சில் அண்ணன்-தம்பி பாசத்ப்ை பிழித்து சாறு எடுத்துள்ளார் இளங்கோவன். அது ஏன் என்பது அவருக்குமட்டுமே வெளிச்சம்.
சத்யமங்கலத்தில் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், சந்தன வீரப்பனுக்கு எனது அன்பான வேண்டுகோள். நடிகர் ராஜ்குமாரை இன்னும் வைத்திருக்காமல்உடனே விடுதலை செய்யவேண்டும். இந்த நிலை நீடிக்கக்கூடாது.
தமிழக, கர்நாடக மக்கள் எப்பொழுதும் ஒரு தாய்-பிள்ளையாக பழகி வருவதில் விரிசல் ஏற்பட்டு விடக்கூடாது.
நானும், நண்பர் காளிமுத்துவும் பேசிய பேச்சுக்கள் குடும்பத்தில் அண்ணன் - தம்பிகள் உரிமைக்காக போட்டுக்கொள்ளும் சண்டை போன்றுதான்.இதனால் காங்கிரஸூக்கும், அ.தி.மு.கவுக்கும் இருக்கின்ற கூட்டணியில் எந்தவித மாற்றமும் கிடையாது. கூட்டணி நீடிக்கும்.
நாங்கள் பிரிந்து விடுவோம் என்று யாராவது நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள். தேர்தல் சமயத்தில் இரு கட்சியினரும் வெற்றிக்காககூட்டணியாக செயல்படுவோம் என்று இளங்கோவன் பேசினார்.
சுற்றியிருந்த நிருபர்களுக்கு ஆச்சர்யத்தில் தலையே சுற்ற ஆரம்பித்துவிட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications