யாழ். சண்டையில் 26 இலங்கை வீரர்கள் சாவு
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையில் 26 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இலங்கை ராணுவத்திடமிருந்து யாழ்ப்பாணம் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில்மறைவிடங்களை ஏற்படுத்திக் கொண்டு இலங்கை ராணுவத்தினருடன் சண்டையிட்டு வருகின்றனர்.
இந் நிலையில், புலிகளை தங்களது மறைவிடங்களில் விரட்டுவதற்காக இலங்கை ராணுவம் புதிய தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.இதையடுத்து இலங்கை ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.
புதிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 26 இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் சரத் குமாரரத்னே தெரிவித்தார்.
ஆனால், புதிய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான சண்டை காரணமாக அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும்அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய தாக்குதலின் ஒரு பகுதியாக நாடான்கோவில் மற்றும் பாலவி ஆகிய இடங்களில் புலிகளின் மறைவிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 புலிகள்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து எந்தவிதமான தாக்குதலையும் நடத்துவதிலிருந்துவிடுதலைப் புலிகளைத் தடுக்கும் வகையில் இப் புதிய தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக ராணுவச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் வட பகுதியில் புலிகளின் நிலைகள் மீது இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து கடுமையானத் தாக்குதலை நடத்தி வருவதாகவும், பதிலுக்கும்புலிகளும் தாக்குதல் நடத்துவதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications