வந்தார் ரொமாரியோ .. போட்டார் கோல்கள் .. பிரேஸில் வெற்றி
ரியோ டி ஜெனீரோ:
பொலிவியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்து ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2002-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அதற்குப் பிரகாசமாகியுள்ளது.
2002-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளைத் தேர்வு செய்ய உலகம் முழுவதும் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு 2002-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட நேரடிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைப் போட்டியில் 24 நாடுகள் பங்கு கொள்ள உள்ளன. பிரான்ஸ் தவிர மேலும் 23 நாடுகளைத் தேர்வுசெய்வதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தென் அமெரிக்காவிலிருந்து 3 நாடுகளைத் தேர்வு செய்வதற்கான போட்டி இப்போது நடைபெற்று வருகிறது.
தொடக்க ஆட்டங்களில் தோல்விகளைத் தழுவிய பிரேஸில் அணி அதற்குப் பிறகு தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. பிரேஸில் தலைநகர் ரியோ டிஜெனீரோ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் அந்த அணி 5-0 என்ற கோல் கணக்கில் பொலிவியா அணியைத் தோற்கடித்தது.
1994-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக ஆடி பிரேஸிலுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த ராெெமாரியோ, மீண்டும்பிரேஸில் அணியில் சேர்ந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக பிரேஸில் அணியில் விளையாடாத அவர் பொலிவியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். நீண்ட நாட்களுக்குப் பிறகுவிளையாடி அவர் தனது முதல் ஆட்டத்திலேயே 3 கோல்கலைப் போட்டு தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.
பிரேஸிலின் கோல் கணக்கை 11-வது நிமிடத்தில் ரொமாரியோ தொடங்கினார். அதன் பிறகு 46 மற்றும் 80-வது நிமிடங்களில் அவர் மேலும் 2கோல்கள் அடித்தார். 4-வது கோலை ரிவால்டோவும், பிரேஸுக்கான 5-வது கோலை பொலிவியா அணியின் கார்ஸியாவும் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் பிரேஸில் உள்ளது. பராகுவே, உருகுவே ஆகிய அணிகளும் 14புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளன.
16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் அர்ஜென்டினாவும், 15 புள்ளிகளுடன் கொலம்பியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications