கட்சித் தலைவர் பதவிக்கு நவாஸ் மனைவி, தந்தை போட்டி
லாகூர்:
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் புதிய தலைவர் யார் என்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் தொடங்கிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு இப்போது தலைவர் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அக் கட்சியின் தலைவராக இருந்த நவாஸ் ஷெரீப் விமானக் கடத்தல், சதி மற்றும் வரி ஏய்ப்பு ஆகிய குற்றங்களுக்காக ஆயுள் தண்டனைகள்விதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் சட்டப்படி, ஏதாவது ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர் அரசில் கட்சியின்தலைவராக இருக்க முடியாது.
இதையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டிய நிலையில் உள்ளார்.
அவருக்கு அடுத்து அக் கட்சியின் தலைவர் பதவிக்கு வருவது யார் என்பது குறித்து நவாஸ் ஷெரீப்பின் தந்தை மியான் மொகம்மது ஷெரீப் மற்றும் நவாஸ்ஷெரீப்பின் மனைவி குல்சூமுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஒருபோதும் உடையக் கூடாது என்பதற்கான முயற்சிகளை மியான் மொகம்மதுஷெரீப் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக அவர் கட்சியின் தலைவர்களைச் சந்தித்துப் பேசி கட்சிக்குள் ஒற்றுமையாக இருக்கும்படி கேட்டுள்ளார்.
கட்சியின் எதிர்காலம் பற்றி கவலை கொண்டுள்ள அவர், கட்சித் தலைவர் பதவியை வேறு யாராவது ஒருவர் ஏற்கவும் அவர் சம்மதித்துள்ளார். கட்சிஉடையக்கூடாது என்பதுதான் அவரது குறிக்கோள் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கட்சித் தலைவர் பதவி வேறு யாருக்கும் செல்லக்கூடாது என்பதில் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சும் உறுதியாக உள்ளார். கணவருக்கு அடுத்துதனக்குத்தான் கட்சித் தலைவர் பதவி தரப்படவேண்டும் என்று அவர் கருதுகிறார்.
மேலும், கட்சித் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டால் அப் பதவியை குல்சும்தான் ஏற்கவேண்டும் என்று சிறைக்குச் செல்வதற்கு முன் நவாஸ்ஷெரீப் கூறியதை தனக்கு சாதகமாக எடுத்துக் காட்டுகிறார் குல்சும்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் தனக்கு அதிக உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறார் குல்சும். இதனால், கட்சித் தலைவர் பதவி குறித்துஉயர் மட்டத் தலைவர்களிடையே குழப்பம் நீடிக்கிறது.
இக் குழப்பத்தால் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தானின் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜா மொகம்மது ஸஃபருல் ஹக் லாகூரில் முகாமிட்டுள்ளார். கட்சித் தலைமை குறித்துமியான் மொகம்மது ஷெரீப்புடன் அவர் பேச்சு நடத்தினார்.
இந் நிலையில், கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சவுத்ரி சுஜாத் உசேன், செப்டம்பர் 6-ம் தேதி தனது இல்லத்தில் கட்சிக் கூட்டத்தைக்கூட்டியுள்ளார். இதில் கட்சித் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டிய நிலையில், கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
உசேன் கூட்டியுள்ள கட்சிக் கூட்டம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ள உசேன், லாகூரில் 6-ம் தேதி நடத்த உள்ள கூட்டத்தில் நவாஸ் எதிர்ப்பாளர்கள்கலந்து கொள்வார்கள் என்று கருதப்படுகிறது.
கட்சியை பலப்படுத்தவும், நவாஸ் ஷெரீப்பால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிப்படுத்தவும்தான் இக் கூட்டத்தை நான் கூட்டியுள்ளேன் என்று உசேன்கூறியுள்ளார்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ராஜா மொகம்மது ஸஃபருல் ஹக், கட்சி ஒற்றுமையாகவே இருக்கிறது. கட்சிக்குள் சில தலைவர்களிடையே கருத்துவேறுபாடு இருப்பது உண்மைதான். அந்த கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும் என்றார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜா மொகம்மதுஸஃபருல் ஹக்.
இப்போதுள்ள நிலையில் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மத்திய செயற்கமிட்டியைக் கூட்டவேண்டிய தேவை ஏதும்ஏற்படவில்லை. இப்போதுள்ள மிக முக்கிய பிரச்சினை கட்சியின் ஒற்றுமையைக் காக்கவேண்டியதுதான் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications