அ.தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை
சென்னை:
வியாபாபரத் தகராறில் சென்னையில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சென்னை அருகேயுள்ள திருவேற்காட்டில் அ.தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார். வில்லிவாக்கம் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச்செயலாளராக இருந்தவர் முருகேசன். ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து வந்தார்.
முருகேசனுடன் , ரகுபதி, சங்கர் ஆகியோரும் ரியல் எஸ்டேட் பிஸினஸில் ஈடுபட்டு வந்தனர். ரகுபதியம், சங்கரும் முருகேசனிடமிந்து பிரிந்து விட்டனர்.ரகுபதியும், சங்கரும் ஆனந்த், ராஜா என்பர்களுடன் பிஸினஸ் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நெருங்கிய நண்பரது இல்ல விழாவிற்கு முருகேசன் சென்றிருந்தார். அந்த விழாவில் பழைய நண்பர்கள் ரகுபதி, சங்கர் இருவரும் வந்திருந்தனர்.
திங்கள்கிழமை இரவு 10.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்த வெற்றிலைப்பாக்கு கடையில் வெற்றிலை வாங்கச் சென்றார்முருகேசன்.
வெற்றிலை வாங்கிக்கொண்டு திரும்பும் பொழுது அங்கு மறைந்திருந்த மூன்றுபேர் திடீரென முருசேகன் மீது பாய்ந்து, அவரை சரமாரியாக வெட்டித்தள்ளினார்கள். முருகேசன் ரத்தவெள்ளத்தில் மிதந்தார். உயிருக்குப் போராடிய முருகேசனை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.ஆனால் வழியிலேயே இறந்து விட்டார் முருகேசன்.
ஆனந்த், ரகுபதி, சங்கர் ஆகியோர் தான் முருகேசனை வெட்டிக் கொன்றவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று பேரும்தலைமறைவாக உள்ளனர். இவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக திருவேற்காடு பகுதியில் கடைகள்அடைக்கப்பட்டன.
அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!