இதற்குத் தானே ஆசைப்பட்டாய்!: கூலித் தொழிலாளியின் விபரீத ஆசை
பரமகுடி:
ரோட்டோரம் நின்று கொண்டிருந்த பஸ்ஸை ஓட்டி பார்க்க விரும்பிய கூலித் தொழிலாளி 2 பஸ்களையும் 2வேன்களையும் சேதப்படுத்திவிட்டு சிறைக்குச் சென்றார்.
பரமகுடியில் இதச் சம்பவம் நடந்தது. இதே ஊரின் பகவத்சிங் பேட்டையைச் சேர்ந்தவர் சேகர் (35). இவர் ஒருகூலித் தொழிலாளி. சில நாட்களுக்கு முன் வேலை ஏதும் இல்லாததால் பஸ் ஸ்டாண்டில் ஒரு டீ கடையில் சும்மாஉட்கார்ந்திருந்தார்.
அப்போது மதுரையிலிருந்து ஒரு தனியா பஸ் வந்தது. பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் டிரைவரும்,கண்டக்டரும் டீ அருந்த இறங்கிச் சென்றனர். பஸ்சின் என்ஜின் சாவியை அவர்கள் எடுக்காமல் விட்டுச் சென்றனர்.
சும்மா உட்கார்ந்திருந்த சேகருக்கு திடீர் ஆசை ஒன்று பிறந்தது. இந்த பஸ் ஓட்டுவது என்ன பெரிய குதிரைக்கொம்பா என தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டவர் பஸ்ஸை எப்படியாவது ஓட்டிப் பார்த்துவிடும்முடிவுக்கு வந்தார்.
நேராக பஸ்சில் ஏறி டிரைவர் சீட்டில் அமர்ந்தார். என்ஜினை ஆன் செய்தார். கியரை அப்படி, இப்படி ஆட்டினார்.ஆக்சிலேட்டரை மிதித்தார். பஸ் பாய்ந்தது. அப்புறம் தான் என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.
ஸ்டியரிங்கை சுற்றிக் கொண்டே இருந்தார். பஸ் வளைந்து வளைந்து சென்று முன்னாள் நின்று கொண்டிருந்தஅரசுப் பேருந்தின் மீது மோதியது. இதில் அரசுப் பேருந்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து திருப்பிக் கொண்டு ஒரு வழியாய் மெயின் ரோட்டுக்கு வந்தார் சேகர். அது ஒரு தேசியநெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் விரைந்து கொண்டிருக்க பயந்து போன சேகர் பஸ்ஸை மீண்டும் சாலைஓரத்துக்குத் திருப்பினார்.
பஸ்ஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சேகரால் முடியவில்லை. வேகமாகச் சென்ற பஸ் அங்கு நின்றுகொண்டிருந்த குரியர் சர்வீஸ் வேனை முட்டியது. பின்னர் பயணிகள் ஏறிக் கொண்டிருந்த வேன் மீதும் மோதியது.இதையடுத்து வேனில் இருந்த அடித்துப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தலை தெறிக்க ஓடினர்.
மக்கள் ஓடுவதைக் கண்டு பீதியடைந்த சேகரும் ஒரு உருப்படியான காரியம் செய்தார். பஸ்சிலிருந்து தானும்குதித்து அங்கிருந்து தப்பி ஓடினார். வேனில் மோதிய பஸ் அங்கேயே நின்றுவிட்டது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் பறந்தது. அவர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அங்குபொது மக்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தனர். இதை கூட்டத்தோடு கூட்டமாக நின்றுரசித்துக் கொண்டிருந்தார் நமது ஹீரோ சேகர்.
பஸ்ஸை ஓட்டிய நபர் எங்கே என போலீசாரும் பொது மக்களும் பல மறைவிடங்களில் தேடினர். ஆனால், சேகர்அந்தக் கூட்டத்தில் தான் நின்று கொண்டிருந்தார். அவரை ஒருவர் ஒருவழியாய் அடையாளம் கண்டு கொண்டார்.
இதையடுத்து சேகரை போலீசார் கைது செய்தனர். பஸ் நிலையம் முதல் காவல் நிலையம் அடியும் உதையும் மாற்றிமாற்றி கொடுத்து சேகரை போலீசார் இழுத்துச் சென்றனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சேகரை15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி முத்துசாரதா உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications