இலங்கை தேர்தல் களத்தில் 5,430 பேர்
கொழும்பு:
இலங்கையில் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் பெரும் அளவிலானவேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சுமார் 5,430 பேர் பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சைகளாகவும் போட்டியிட தங்களது பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர். வேட்பு மனுக்களை தாக்கல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது.
மொத்தமுள்ள 225 தொகுதிகளில் இந்த 5,430 பேர் போட்டியிடுகின்றனர். 1994-ம் ஆண்டு நடந்த கடந்த பொதுத்தேர்தலில் 1,449 பேர் தான் போட்டியிட்டனர்.
இதற்கிடையே இன மோதலகளுடன் தேர்தல் தொடர்பான அரசியல் மோதல்களும் இலங்கையில்தொடங்கிவிட்டன. கிழக்கு அம்பாரா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்தொண்டர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 12 பேர் காயமடைந்தனர்.
கடும் மோதல் நடந்து வரும் யாழ்பாணத்திலும் கூட அதிக அளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்துள்ளனர். வடக்கு வன்னி, திரிகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களிலும் அதிக அளவிலானவேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வரும் அக்டோபர் 10ம் தேதி நடக்க உள்ள இந்தத் தேர்தலில் 12.07 மில்லியன் பேர் வாக்களிப்பர்.
29 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைத்தாக்கிய கப்பற்படை வீரர் ரோகன்-டி-சில்வாவும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications