கார்கிலில் பாகிஸ்தான் மீண்டும் ஆக்கிரமிப்பா? மறுக்கிறது இந்தியா
ஜம்மூ:
கார்கிலில் சில மலைக் குன்றுகளை பாகிஸ்தான் மீண்டும் ஆக்கிரமித்துள்ளதாக வந்துள்ள செய்திகளை இந்தியபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடுமையாக மீண்டும் மறுத்துள்ளார்.
இது அரசியல்ரீதியாக கிளப்பிவிடப்பட்ட புரளி என்று அவர் கூறினார்.
காஷ்மீர் எல்லைக் கோட்டில் திராஸ் அருகே 17,300 அடி உயரமுள்ள பாயிட்-5353 என்ற மலைக் குன்றைபாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்திய எல்லைக் கோட்டுக்குள்இந்த குன்று இருப்பதாகவும் கூறப்பட்டது. இதை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்து வருகிறது.
இந் நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ முகாம்களைபார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், பாயிண்ட் 5353 குன்றுப் பகுதியை நானேபார்வையிட்டேன். இது எல்லைக் கோட்டில் உள்ளது. ஆனால், இந்திய எல்லையில் இல்லை.
அதே போல கார்லிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த தீவிரவாதிகளுடன் பேச்சுநடத்துவதில் இந்தியா திட்டவட்டமாக உள்ளது. இதற்காக வழிமுறைகளையும் ஆராயந்து வருகிறோம் என்றார்.
முன்னதாக லடாக், ஜம்மூ, காஷ்மீர் ஆகிய எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் வீரர்களைபெர்னாண்டஸ் சந்தித்தார். சமீபத்தில் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினரும் பாகிஸ்தான் படைகளும் கடும்துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டன. இந் நிலையில் பெர்னாண்டசின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications