மாற்று வழி குறித்து யோசிப்போம் .. கிருஷ்ணா
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடித்து வைத்துள்ள கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான மாற்று வழிகளையும்ஆராய்வோம் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த ஜூலை 30-ம் தேதி கடத்திச் சென்றான். கடத்தியவர்களை விடுவிக்க சிலகோரிக்கைகளை வீரப்பன் தெரிவித்தான்.
வீரப்பனின் கோரிக்கைகளை கர்நாடக அரசும், தமிழக அரசும் ஏற்றுக் கொண்டு அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
ஆனால், வீரப்பனின் முக்கிய கோரிக்கையான கர்நாடக சிறைகளில் உள்ள 51 தடா கைதிகளின் விடுதலை, உச்ச நீதிமன்ற தடையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ராஜ்குமார் விடுதலை ஆவது தாமதமாகிக் கொண்டே வருகிறது.
இது குறித்து 3-வது முறையாக காட்டுக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்து விளக்கி வருகிறார் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால்.
இந் நிலையில், பெங்களூரில் நிருபர்களைச் செவ்வாய்க்கிழமை சந்தித்தார் எஸ்.எம். கிருஷ்ணா. அப்போது அவர் கூறியதாவது:
ராஜ்குமாரையும் மற்றவர்களையும் வீரப்பன் கடத்திச் சென்று 36 நாட்கள் ஆகிவிட்டன. வீரப்பன் பிடியில் உள்ளவர்களை பத்திரமாக மீட்பதற்கானஅனைத்து முயற்சிகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.
ராஜ்குமாரை மீட்க ஒரே வழியில் யோசிக்காமல் மாற்று வழிகளிலும் கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், அது எந்த வழி என்பதைஇப்போதைக்குத் தெரிவிக்க முடியாது.
கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வீரப்பனின் கோரிக்கையை மட்டும் நிறைவேற்றிவிட்டு ராஜ்குமாரை மீட்பதற்குப் பதிலாக ராஜ்குமார் மீட்பு நடவடிக்கையின்போது வீரப்பனையும்பிடிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசுக்கு யோசனை கூறப்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணா.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications