வீரப்பனுக்கு தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறது தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தடா கைதிகள் விடுதலை, 5 தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் முடிக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீரப்பனுக்கு அரசு தூதர் கோபால் மூலமாக தமிழக அரசு தகவல் அனுப்பியுள்ளது.

இதற்கு வீரப்பனிடம் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பதில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரப்பனின் முக்கியமான கோரிக்கைகளில் இரண்டு, கர்நாடகாவில் உள்ள 121 பேர் மீதுள்ள தடா கைதிகள் மீதான வழக்குகளைவாபஸ் பெற வேண்டும், தமிழ் தீவிரவாதிகள் ஐந்து பேர் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று விடுதலை செய்யவேண்டும்என்பதாகும்.

கர்நாடகச் சிறையில் உள்ள 121 கைதிகளை விடுவிக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த கைதிகளில் 30பேரை விடுவிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால், தடா கைதிகளை விடுவிப்பதில்தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடை யே, தமிழகத்தில் உள்ள ஐந்து தமிழ் தீவிரவாதிகள் விடுவிப்பதும் உச்ச நீதிமன்றத்தடை உத்திரவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தீவிரவாதிகள் ஐந்து பேரின் விடுதலையும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தான் உறுதியாகும்.

வீரப்பனின் இரண்டு கோரிக்கைளை தீர்த்து வைக்க அரசு நினைத்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக தாமதம்ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில், ராஜ்குமாரை மீட்டு வர அரசு தூதராகச் சென்றுள்ள நக்கீரன் பத்திரிகையாசிரியர் கோபால் தொடர்ந்து வீரப்பனுடன்பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தைகள் நீதிமன்ற வழக்குகளால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாதுஎன்று இரு மாநில அரசுகளுமே கவலையில் இருக்கின்றன.

வீரப்பனின் மற்றொரு கோரிக்கைகளில் ஒன்று, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி. இதை விசாரிக்கசதாசிவம் கமிஷன் மறுபடியும் வருன்ற 11-ம் தேதி விசாரணையை ஆரம்பிக்கிறது. நீதிமன்றத் தாமதங்கள், தடைகள், சதாசிவம்கமிஷனின் விசாரணை, பெங்களூரில் திருவள்ளூவர் சிலை திறப்புவிழா போன்ற ஒவ்வொறு தகவலையும், ரேடியோ மூலம்வீரப்பனுக்கு தகவல் தெரிவித்து வருகிறது அரசு.

நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் தமிழக அரசு தகவல் தெரிவித்து, அங்கிருந்தும் கோபாலுக்கு இதத் தகவல்எடுத்துச்சொல்லப்படுகிறது. இந்த தகவலை வைத்து கோபால் வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

வீரப்பன் தனது கோரிக்கைளில் பிடிவாதமாகவே இருக்கிறார். கோர்ட், கேஸூ எனக்கென்ன என்கிற ரீதியிலேயேபேசிக்கொண்டிருக்கிறான். இந் நிலையில், அரசு எடுத்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் வீரப்பனுக்கு தகவலாகவும்அனுப்பியிருக்கிறோம். என்ன நடக்கப்பபோகிறது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது என்று கவலையோடு பேசுகிறார்கள்தமிழக காவல்துறை அதிகாரிகள்.

வீரப்பனுக்கு நக்கீரன் பத்திரிகை அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கு ச்ெவவாய்க்கிழமை இரவு அல்லதுமறுநாள் காலை நக்கீரன் கோபாலிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+