திண்டுக்கல்லில் மசூதியை தகர்க்கும் முயற்சி முறியடிப்பு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் மசூதியை குண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பாரப்பட்டியில் கடந்த மூன்றாம் தேதி வினாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடந்தது. அப்போது இந்துமுன்னனியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிலர் கைதும் செய்யப்பட்டனர். சம்பவத்தை அடுத்துஅந்தப் பகுதி பதட்டத்தில் ஆழ்ந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை திண்டுக்கல் வத்தலகுண்டு மெயின் ரோட்டில் உள்ள இரும்புப்பட்டறை அருகேரோந்து சென்று கொண்டிருந்த போலீஸார், பட்டறை அருகே வந்த பொழுது சந்தேகத்துடன், பட்டறையில் சிலர்பேசிக்ககொண்டிருந்தை கவனித்தனர்.

பிடித்து விசாரிக்க ஆரம்பித்தனர். விசாரணையில் அதிர்ந்து போனார்கள் போலீஸார். பேகம்பூர் பள்ளிவாசலை வெடிகுண்டுவைத்து தகர்க்கவும், அரசு சொத்துக்களை சேதப்படுத்தவும் இவர்கள் சதித்திட்டம் தீட்டியதாக தெரியவந்ததது.

இது தொடர்பாக, பாரப்பட்டியைச்சேர்ந்த நாகராஜ், ரத்தினம், போத்திராஜ் ஆகிய மூன்று இளைஞர்களையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

போலீசாரின் முன்னெச்சரிக்கை காரணமாக திண்டுக்கல்லில் நடக்கவிருந்த பெரிய மதக்கலவரம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+