"ஒத்துழைக்க மறுத்த மனைவியை கொன்ற கணவன்
டெல்லி:
மனைவியை உறவுக்கு அழைத்து அவர் வராததால், அவரையும், அவரது உறவினர்கள்மூவரையும் கொன்றார் கணவர்.
உத்தரப்பிரதேச மாநிலம் இடாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் சண்டேலா.வேலையில்லாதவர். அவரது மனைவி இந்து வக்கீல் தொழில் புரிந்து வருகிறார்.
சண்டேலாவுக்கு வேலை இல்லாத காரணத்தால் அவரது மனைவி திருமணம் ஆனபின்பும் சண்டேலாவுடன் தங்கவில்லை. பெற்றோருடனும், சகோதரியுடனும் தங்கிஇருந்தார்.
ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி சண்டேலா தனது நண்பர் ஒருவருடன் இடாவாவில் உள்ளமனைவி வீட்டுக்குச் சென்றார். ச்ண்டேலாவின் மனைவியும் மற்றவர்களும் முதல்மாடியில் உறங்க, சண்டேலாவும் அவரதும் நண்பரும் வீட்டின் கீழ் பகுதிக்கு உறங்கச்சென்றனர்.
அனைவரும் உறங்கிய பிறகு நள்ளிரவில் சண்டேலா தனது மனைவி இந்துவைஉறவுக்கு அழைத்துள்ளார். இந்து மறுத்துள்ளார். கோபம் கொண்ட சண்டேலாஇந்துவின் கழுத்தை நெரித்தார். பின்னர் தண்ணீர் தெளித்து தனது மனைவியை எழுப்பமுயற்சித்திருகிறார்.
இந்துவிடமிருந்து பதில் இல்லாமல் போகவே அவரைக் கம்பால் தாக்கி பின் அவரதுகழுத்தை கத்தியால் வெட்டிக் கொன்றார். மகளின் அறையிலிருந்து சத்தம் வருவதைக்கேட்டு இந்துவின் தாய் சிஷீ பிரபா தனது மகளின் அறைக்கு வந்து தன் மகள் இறந்துகிடப்பதைப் பார்த்தார். உடனே அவரை, நண்பரின் உதவியுடன் சண்டேலா கழுத்தைவெட்டிக் கொன்றார்.
நாயையும் விடவில்லை:
தன்னை போலீசிடம் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என பயந்து மாமனார் ரண்வீர்சிங் மற்றும் மைத்துனி வீணா ஆகியோரையும் சண்டேலா கொன்றார். பிறகுநண்பருடன் தப்ப முயன்றார். அப்போது வீட்டிலிருந்த பாமரேனியன் நாய் குலைத்தது.அதையும் சண்டேலா விடவில்லை. கொன்று விட்டுத் தப்பினார்.
மறு நாள் வீட்டுக்கு வந்த பால்காரர் வீடெல்லாம் பிணமாகக் கிடப்பதைப் பார்த்துபோலீசுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் டெல்லியில் வசிக்கும் இந்துவின் இளையசகோதரி ரேகாவுக்குத் தகவல் கொடுத்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில்சண்டேலாவை போலீஸார் கைது செய்தனர்.
நான்கு மணி நேர விசாரிப்புக்குப் பின் சண்டேலா குற்றத்தை ஒப்புக் கொண்டார்.ஏதோ புழு பூச்சியைக் கொன்றதைப் போல் தான் செய்த கொலைகளை மிகசாதாரணமாக சண்டேலா கூறினார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications