விடுதலை கோரி மிரட்டிய கைதி சுட்டுக் கொலை
கொழும்பு:
தன்னை விடுதலை செய்யவில்லை என்றால் குண்டுவீசிக் கொன்றுவிட்டு நானும்தற்கொலை செய்து கொள்வேன் என்று சிறை வார்டன்களை மிரட்டிய கைதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளநெகோம்போ சிறையில் செவ்வாய்க்கிழமை இச் சம்பவம் நடந்தது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரும் ரிமாண்டுக்காக நீதிமன்றத்துக்குஅழைத்துச் செல்லவதற்காக வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் பற்றிய தகவல்களை சிறைக் காவலர்கள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது வரிசையாக நின்றிருந்த கைதிகளில் ஒருவர் தன்னை உடனே விடுதலைசெய்யவேண்டும் என்று கூச்சலிட்டார்.
இல்லையென்றால் தான் கையில் வைத்துள்ள கையெறி குண்டை வீசி அனைவரையும்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுவிடுவதாக மிரட்டினார்.
இத் திடீர் சம்பவத்தால் பதற்றமடைந்த சிறைக் காவலர்கள், துப்பாக்கியால் அக்கைதியைச் சுட்டுக் கொன்றனர். கைதி கீழே விழுந்த நேரத்தில் அவர் கையில் இருந்தகையெறி குண்டும் கீழே விழுந்து வெடித்தது. அதனால் உயிருக்கோ,உடமைகளுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை.
திருட்டு, அபாயகரமான ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அக் கைதிக்கு கையெறி குண்டு எப்படிகிடைத்தது என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications