இலங்கை: ராணுவம்-புலிகள் இடையே கடும் சண்டை
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தில் இலங்கைராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டைநடந்து வருகிறது.
இதுவரை நடந்த சண்டையில் இரு தரப்பிலும் 360 பேருக்கு மேல் இறந்திருக்கலாம்என்றும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணுவத் தரப்பில் 8அதிகாரிகள் உள்பட 132 பேர் இறந்துவிட்டதாகவும், 777 பேர் காயமடைந்ததாகக்கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தரப்பில்தான் அதிக உயிர்ச்சேதம் என்றும் தற்போது கிடைத்ததகவலின்படி 236 புலிகள் கொல்லப்பட்டதாகவும் 300 பேருக்கு மேல்காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என்றுஇலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதையடுத்து தேர்தலின்போது எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களிலும் புலிகள்ஈடுபடாமல் தடுக்கும் பொருட்டும், யாழ்ப்பாணம் பகுதியில் புலிகளின் கைவசம்உள்ள பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் பொருட்டும் புதிய தாக்குதலை இலங்கைராணுவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
யாழ்ப்பாணம் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலிகளின் மறைவிடங்கள் மீதுஇலங்கை ராணுவம் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. பதிலுக்குவிடுதலைப் புலிகளும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இரு தரப்பினரும் ராக்கெட் தாக்குதலை நடத்தி வருவதாக இலங்கை ராணுவத்தின்செய்தித் தொடர்பாளர் சனத் கருணரத்னே தெரிவித்தார்.
இலங்கை ராணுவத்தினருக்கு உதவியாக இலங்கை விமானப்படையினரும் புலிகளின்நிலைகள் மீது வான் வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கொழும்புத்துறைபகுதியில் உள்ள புலிகளின் நிலைகள் மீதுதான் இலங்கை ராணுவத்தினர் கடுமையானதாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
திங்கள்கிழமைக்குப் பிறகு இரு தரப்பிலும் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும்புலிகளுடனான சண்டையில் இலங்கை ராணுவம் பாதுகாப்பான இடத்தில் இருந்துதாக்குதலை நடத்தி வருகிறது என்றும் ராணுவச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் தாங்கள் சுட்டுக் கொன்றநபர்களின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துவருகின்றனர்.
இலங்கை ராணுவம் சார்பில் இதுவரை 37 புலிகளின் சடலங்களும், புலிகள் தரப்பில் 50இலங்கை ராணுவத்தினரும் சடலங்களும் செஞ்சிலுவைச் சங்கத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று கொழும்பில் உள்ள செஞ்சிலுவைச் சங்க செய்தித்தொடர்பாளர் ஹர்ஷா குணவர்த்தனே தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications