யு.எஸ். ஓபன்: கால் இறுதியில் சாம்ப்ராஸ், ஹிங்கிஸ், தேவன்போர்ட், செரீனா...
நியுயார்க்:
நியுயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் விளையாட ஆண்கள் பிரிவில் பீட் சாம்ப்ராஸ், ஹெவிட், பெண்கள் பிரிவில்மார்ட்டினா ஹிங்கிஸ், தேவன்போர்ட், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.
திங்கள்கிழமை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் யுங்-டெய்க் லீயை 7-6, 6-2, 6-4 என்றசெட் கணக்கில் பீட் சாம்ப்ராஸ் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை சாம்ப்ராஸ் வென்றால் அதுஅவருக்கு 14-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இதுவரை யாரும் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதில்லை.
அப்படி இந்த ஆண்டு சாம்ப்ராஸ் பட்டம் வென்றால் அது புதிய சாதனையாகும். கால்இறுதிக்கு முன்னேறியுள்ளதன் மூலம் சாதனை இலக்கை சாம்ப்ராஸ் நெருங்கியுள்ளார்.
லெய்டான் ஹெவிட் 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தாமஸ் என்குவிஸ்டையும்,அர்னாடு கிளெமென்ட் 3-6, 6-2, 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஆன்ட்ரீபாவெல்லையும், ரிச்சர்டு கிராஜிசெக் 7-6 (13-11), 6-4, 6-1 என்ற செட் கணக்கில்டொமினிக் ர்பாடியையும் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினர்.
மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பாதியிலேயே நிறுத்தப்பட்டஆண்களுக்கான 3-வது சுற்று ஆட்டங்களில் கார்லோஸ் மோயா, டாட் மார்ட்டின்ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்கள் பிரிவில் மார்ட்டினா ஹிங்கிஸ், லின்ட்ஸே தேவன்போர்ட், ஆங்கே ஹூபர்,செரீனா வில்லியம்ஸ், எலீனா டெமென்டீவா ஆகியோர் 4-வது சுற்றில் வெற்றி பெற்றுகால் இறுதிக்கு முன்னேறினர்.
மழையின் காரணமாக நிறுத்தப்பட்ட மார்ட்டினா ஹிங்கிஸ்-சான்ட்ரின் டெஸ்டுட்இடையேயான ஆட்டத்தில் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஹிங்கிஸ் வெற்றி பெற்றார்.
ஆங்கே ஹூபருக்கு எதிரான ஆட்டத்தில் மேரி பியர்ஸ் காயமடைந்து விலகியதைஅடுத்து கால் இறுதிக்கு ஹூபர் தகுதி பெற்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications