வாஜ்பாய் பயணம் முக்கியமானது என்கிறது அமெரிக்கா
டெல்லி:
இந்தியப் பிரதமர் வாஜ்பாய், இம் மாதம் அமெரிக்காவுக்கு மேற்கொள்ள உள்ளபயணம் அனைத்து விதத்திலும் முக்கியமானது என்று அமெரிக்க அரசு அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அமெரிக்காவில் வாஜ்பாய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தாலும், அமெரிக்கப்பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை ரத்து செய்யாமல் அமெரிக்காசெல்கிறார் வாஜ்பாய்.
அமெரிக்க அதிபர் என்ற அதிகாரத்தின் கடைக் கட்டத்தில் இருக்கும் பில் கிளின்டனுன்வாஜ்பாய் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்துகிறார். இரு நாடுகளுக்கும்இடையான உறவு, பிரச்சினைகள் மற்றும் உலக நடப்புகள் பற்றி இரு நாடுகளின்தலைவர்களும் பேசுகின்றனர்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுச்சூழல், பரஸ்பர சட்ட உதவி ஆகியவை தொடர்பானமூன்று முக்கிய ஒப்பந்தங்களில் வாஜ்பாயும், கிளின்டனும் கையெழுத்திடுவார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுத பரிசோதனைத்தடை ஒப்பந்தம் ஆகியவை பற்றியும் இரு தலைவர்களும் விரிவாகப் பேசுவார்கள்என்று கூறப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு முன் அணு ஆயுதச் சோதனை நடத்தியதால் இந்தியா மீதுபொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. பல்வேறு காலகட்டத்தில் பலதடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன.
மீதமுள்ள தடைகள், இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க உள்ள அமெரிக்க அரசு நிர்வாகம், அந்தப்பிரச்சினையில் வாஜ்பாயியின் சுற்றுப்பயணத்தை எளிதாக எடுத்துக் கொள்ளாது.
வழக்கமாக ஒரு நாட்டுத் தலைவர் அமெரிக்காவுக்கு வந்தால் எந்த அளவுக்குமுக்கியத்துவம் தரப்படுமோ அந்த அளவுக்கு வாஜ்பாய் பயணத்துக்கும்முக்கியத்துவம் தரப்படும்.
இந்தியாவுடன் நல்லுறவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் வாஜ்பாயியின் இந்தசுற்றுப்பயணத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அரசு அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications