2 தமிழர் கட்சி வேட்பாளர்கள் தேர்தலிலிருந்து வாபஸ்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைச்சேர்ந்த வேட்பாளர்கள் இருவர் விலகிக் கொண்டனர்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வேட்பாளர்களான தம்பு லோகநாதன்பிள்ளை மற்றும் வேலாயுதன் ஆகிய இருவரும் ஈழம் மக்கள் ஜனநாயக கட்சியினரால்(இ.பி.டி.பி.) மிரட்டப்பட்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் தேர்தலில் இருந்துவிலகிக் கொண்டனர்.
இரு வேட்பாளர்களும் யாழ்பாணத்திலிருந்து போட்டியிட்டு வெற்றி பெறவேண்டுமென்று மிக ஆர்வமுடன் இருந்தனர். இப்போது அவர்கள் தேர்தலிலிருந்துவிலகிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை மிகவும் வருத்தமளிக்கிறது.
இ.பி.டி.பி. யின் இந்த மிரட்டல் தொடரும்.அவர்கள் தமிழர் ஐக்கிய விடுதலைமுன்னணியின் மற்ற வேட்பாளர்களையும் விலகச் சொல்வார்கள் எனவும்அக்கட்சியின் தலைவர்ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.
மேலும், இ.பி.டி.பி.யைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அரசுவேலைவாய்ப்பு அளித்துள்ளது எனவும் ஐக்கிய தமிழர் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இ.பி.டி.பி. 1994-ம் ஆண்டு தேர்தலில் யாழ்பாணத்தில் 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications