இரும்பு ஏற்றுமதி 92 சதவீதம் வீழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்:

இந்தியாவிலிருந்து பிரான்ஸிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இரும்பு, எஃகுப் பொருட்களின் அளவு இந்த வருடம் 92 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலிருந்து இரும்பு, எஃகுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் அதிக அளவு பிரான்சுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. தற்போதுஏற்றுமதி கணிசமாகக் குறைந்துள்ளது.

பிரெஞ்சு வர்த்தக அமைச்சகம் இதுகுறித்து நடத்திய ஆய்வில், 1999 ம் ஆண்டு முதலான ஆறு மாதத்தில், இருந்த ஏற்றுமதியை விட 2000 மாவது ஆண்டுஇந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இரும்பு, எஃகுப் பொருட்கள் 92 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து பிரான்சுக்கு 1999 ம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட இரும்பு, எஃகுப் பொருட்கள் 4, 315 டன்களாகஇருந்தது. ஆனால் அதே சமயம் இந்த வருடம் முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதியின் அளவு 379 டன்கள் குறைந்துள்ளது.

பிரான்ஸ் மதிப்புப்படி 1999 ம் ஆண்டு முதல் ஆறு மாதத்தில் ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பு 10 மில்லியன் பிரான்சாக இருந்தது. இந்த வருடம்ஏற்றுமதியின் அளவு 3 மில்லியன் பிரான்சாகக் குறைந்துள்ளது. அதாவது ஏற்றுமதியின் அளவு 72 சதவீதம் குறைந்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+