"முஸ்லீம் கட்சிக்கு சந்திரிகா ஆயுதங்கள் தருகிறார்
கொழும்பு:
தேர்தலின்போது வன்முறை ஏற்பட்டால் திருப்பித் தாக்குமாறு கூறி முஸ்லீம் கட்சிஒன்றின் தொண்டர்களுக்கு அதிபர் சந்திரிகா அரசு ஆயுதங்களைத் தருகிறது என்றுஇலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல்முடிந்துள்ள நிலையில், பிரசாரம் துவங்கியுள்ளது. இந்த நிலையில், வன்முறையும்களை கட்டத் துவங்கியுள்ளது.
கிழக்கு அம்பாரை மாவட்டத்தில், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தசிலர், ஐக்கிய தேசியக் கட்சித் தொண்டர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை, வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டுத் திரும்புகையில் இரு கட்சித்தொண்டர்களும் மோதிக் கொண்டனர். இதில் ஐக்கிய தேசியக் கட்சித் தொண்டர்ஒருவர் இறந்தார். 29 பேர் காயமடைந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி செய்தித்தொடர்பாளர் அனுரா பண்டாரநாயகே இச்சம்பவம்குறித்துக் கூறுகையில், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அரசேதுப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியுள்ளது. உடனடியாகஅவர்களடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
பிற கட்சித் தொண்டர்களைத் தாக்க முஸ்லீம் காஙகிரஸ் தொண்டர்களுக்கு அதிபர்சந்தரிகா உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அனுரா. அதிபரின் தம்பிதான் அனுரா என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நெருங்க, நெருங்க வன்முறையும் அதிகரித்திருப்பதாக தேர்தலைக்கண்காணித்து வரும் தனியார் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. நாடாளுமன்றம்கலைக்கப்பட்ட ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் இதுவரை 32 தேர்தல் தொடர்பானவன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது.
சனிக்கிழமைதான் சுற்றுலாத் துறை அமைச்சர் சேமசிங்கே மீது தாக்குதல் நடந்தது.இதில் அவரது வலது கண் போனது. தாக்கியவர்கள், ஆளுங்கட்சிக் கூட்டணியைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications