அப்துல் கரீமை சந்திக்கிறார்கள் பிணைக்கைதியின் குடும்பத்தினர்
தார்வாட்:
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தடா கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்துள்ள ஓய்வுபெற்ற கர்நாடக போலீஸ் அதிகாரி அப்துல்கரீமை, ராஜ்குமாருடன் சேர்த்துக்கடத்தப்பட்டுள்ள நாகப்பாவின் குடும்பத்தார் புதன்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனர்.
ராஜ்குமார் உள்பட வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள அவரது உறவினர்கள் மூன்று பேரையும் விரைவில்விடுவிப்பதற்காக மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தடா கைதிகள் உள்பட பல சிறைகளில்அடைக்கப்பட்டுள்ள 122 பேரை விடுவிக்க கர்நாடக அரசு தீர்மானித்திருந்தது.
ஆனால், தடா கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடக எஸ்.ஐ. ஷகீல்அகமதுவின் தந்தை அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட், கைதிகளை விடுவிக்க தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, ராஜ்குமாருடன் சேர்த்து கடத்தப்பட்டுள்ள அவரது உறவினர் நாகப்பாவின் தந்தை ருத்ரப்பா,சகோதரர் சிவப்பா ஆகியோர் அப்துல் கரீமை புதன்கிழமை சந்தித்துப் பேச தீர்மானித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது அப்துல் கரீமுடன் கோர்ட் வழக்குத் தொடர்பாக சமாதானம் பேசுவார்கள் என்று தெரிகிறது.
அப்துல்கரீமை சந்திப்பதற்கு முன், அவர்கள் பெங்களூரில் நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவைச் சந்தித்துப்பேசுவார்கள் என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications