சதாசிவம் கமிஷன் விசாரணைக்கு மீண்டும் தடை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக, கர்நாடக அதிரடிப்படை வீரர்களின்கொடுமைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சதாசிவம் கமிஷன் தனதுநடவடிக்கைகளைத் தொடரக் கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் மீண்டும் தடைவிதித்துள்ளது.

அதிரடிப் படை வீரர்கள் வீரப்பனின் கூட்டாளிகளை விசாரிப்பதாகக் கூறி அப்பாவிகிராமத்து மக்களைக் கொடுமைப்படுத்துவதாக தேசிய மனித உரிமைக் கமிஷனுக்குப்புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க நீதிபதி சதாசிவம்தலைமையிலான கமிஷனை தேசிய மனித உரிமைக் கமிஷன் நியமித்தது.

இந்த விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி கர்நாடகத்தைச் சேர்ந்த காவல்துறைஅதிகாரி முத்துராயா என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுசெய்தார். இதையடுத்து கமிஷன் விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டது.

வீரப்பன் தற்போது ராஜ்குமாரைக் கடத்திக் கொண்டு போயுள்ளான். அவரை விடுவிக்கவேண்டுமானால், சதாசிவின் கமிஷன் விசாரணை தொடர வேண்டும் என்று நிபந்தனைவிதித்துள்ளான். இதையடுத்து கமிஷன் நடவடிக்கையைத் தொடரலாம் என ஆகஸ்ட்மாதம் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கொளத்தூரில் கமிஷன்விசாரணை துவங்கவிருந்தது. இந்த நிலையில் காவல்துறை அதிகாரி முத்துராயாமீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகி கமிஷன் விசாரணைக்குத் தடை விதிக்கவேண்டும் என்று மனு செய்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி அசோக்பான், குருராஜன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கமிஷன் விசாரணையைத் தொடங்க மீண்டும் தடைவிதித்தது.

இதையடுத்து ராஜ்குமாரை மீட்பதில் மேலும் ஒரு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+