"குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தவர் கருணாநிதி
சென்னை:
நெடுஞ்செழியன் முதல்வர் ஆவார் என்று அனைவரும் நினைத்திருந்தபோது குறுக்கு வழியில் பதவியைக்கைப்பற்றியவர் கருணாநிதி என்று அதிமுக மகளிர் அணித் தலைவர் சுலோச்சனா சம்பத் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.மகளிர் அணி செயலாளரும், சம்பத்தின் மனைவியுமான சுலோச்சனா சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கைவிவரமாவது:
சமீபத்தில் சென்னையில் நாஞ்சில் மனோகரனின் படத்திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட கருணாநிதி,எனது கணவர் சம்பத் குறித்து நாகரீகமற்ற முறையில் பேசியுள்ளார். இது அவரது கீழ்த்தரமான எண்ணத்தையேபிரதிபலிக்கிறது.
கொள்கைக்காக பதவியைத் தூக்கியெறிந்த ஈ.வி.கே. சம்பத்தைப் பற்றி பேசுவதற்கு முதல்வர் கருணாநிதிக்கு எந்தத்தகுதியும் இல்லை
சம்பத், அண்ணாவை அண்ணா என்று அழைக்கக் கூச்சப்பட்டு திருவாளர் அண்ணாதுரை என்றழைத்துஅண்ணாவுக்குத் துரோகம் செய்தவர் என்று புறம் கூறியவர் கருணாநிதி.
சென்னை ராபின்சன் பூங்காவில் அண்ணாவால் தொடங்கப்பட்டது தான் தி.மு.க. அப்போது கருணாநிதி இல்லை.அந்த மேடையில் சம்பத் இருந்தார் என்பது வரலாறு. அண்ணாவால் தி.மு.க.வின் ஐம்பெரும் தலைவர்கள் என்றுஅழைக்கப்பட்ட தலைவர்களில் கருணாநிதியின் பெயர் இல்லை.
பெரியாரிடம் 40 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு ஜீவனம் நடத்தி வந்த கருணாநிதி , அய்யா ஆணையிடுகிறார்அண்ணா ஊளையிடுகிறார் என்று எழுதி அண்ணாவையே கேவலப்படுத்தியவர். இந்த இழிச்சொல்லைஒருபோதும் சம்பத் பயன்படுத்தவில்லை.
அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன்தான் பதவிக்கு வர வேண்டும் என்று காத்திருந்தவர்கள்கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தவர் கருணாநிதி.
அன்று மட்டும் சம்பத் தனது கொள்கையில் சமரசம் செய்து கொண்டு பிடிவாதத்தைத் தளர்த்தியிருந்தால்கருணாநிதியால் முதல்வர் பதவியையும், கட்சிப் பதவியையும் பெற்றிருக்க முடியாது.
மூச்சுக்கு மூச்சு பெரியார் பெயரையே உச்சரித்துக் கொண்டு பாரதிய ஜனதாவிடம் தஞ்சம் கிடக்கிறார் கருணாநிதி.இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் 6-வது இடத்தில் இருக்கிறார் கருணாநிதி. இது ஆட்சியையும்,அதிகாரத்தையும் பயன்படுத்தி அவர் அடித்த கொள்ளை எனலாம்.
தூய்மையான அரசியல்வாதி சம்பத். இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது என்று நேருவின் உறுதிமொழியைநாடாளுமன்றத்தில் போராடி பெற்றுத் தந்த பெருமை சம்பத்துக்கு உண்டு. அவரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசகருணாநிதிக்கு எந்த அருகதையும் கிடையாது என்று தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் சுலோச்சனாசம்பத்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications