தொலைத் தொடர்பு ஊழியர் ஸ்டிரைக் தொடங்கியது
டெல்லி:
தொலைத் தொடர்புத் துறையைத் தனி நிறுவனமாக மாற்றுவதைக் கண்டித்து நாடு முழுவதும் புதன்கிழமை 4 லட்சம் தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள்காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.
அரசு செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், 4 லட்சம் தொலைத் தொடர்பு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் மின்னணுதொலை பேசி நிலையங்கள் எந்தப் பாதிப்பும் இன்றி வழக்கம்போல் இயங்கின. இருப்பினும் தொலைபேசிகள் பழுதுபட்டால், சரி செய்வதில் சிக்கல்ஏற்படும் என்றார் அவர்.
தொலைத் தொடர்புத் துறையை, மத்திய தொலைத் தொடர்புத் துறையிலிருந்து பிரித்து பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்ற பெயரில் தனி நிறுவனமாக்கவும்,இத்திட்டத்தை அக்டோபர் 1 ம் தேதி முதல் செயல்படுத்தவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம், தேசியத் தொலைத் தொடர்புத் துறை சம்மேளனம், தேசிய தொலைத்தொடர்புத் துறை சங்கம் ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
தொலைத் தொடர்புத் துறையைத் தனி நிறுவனமாக மாற்றுவதால் பணிபாதுகாப்பு, மத்திய அரசின் பல்வேறு சலுகைகள், ஓய்வூதியச் சலுகைகள்ஆகியவை பாதிக்கப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சுகின்றனர் என்றார்.
இதற்கிடையே, தேசியத் தொலைத் தொடர்புத் துறை சம்மேளன உறுப்பினர்களுக்கும், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கும்இடையே செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியதையடுத்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications