உக்ரைனிலுள்ள இந்திய மாணவர் விடுதி மீது தாக்குதல்
மாஸ்கோ:
உக்ரைன் நாட்டிலுள்ள லகான்ஸ்க் நகரில் இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசிய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் 40 பேர் கொண்ட கும்பல் புதன்கிழமைதாக்குதல் நடத்தியது.
இந்த விடுதியில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபால் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்தனர். புதன்கிழமை 40 பேர்கொண்ட கும்பல் இங்கு வந்தது. இரும்புக் கம்பிகள், தடிகள் ஆகியவற்றுடன் வந்த அவர்கள் விடுதிக்குள் புகுந்து கடுமையாகத் தாக்குதல்நடத்தினார்கள். ஜன்னல் கதவுகள் உடைந்து நொறுங்கின. சுமார் ஒரு மணிநேரம் நடத்திய தாக்குதலுக்குப் பின் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தலைநகர் கியூ நகரிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி வித்யா பூஷன் சோனி இதுகுறித்துக் கூறுகையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இந்திய மாணவர்கள்யாரும் காயமடையவில்லை என்றார். தாக்குதல் நடந்த இடத்தையும் அவர் பார்வையிட்டார்.
தாக்குதல் குறித்து இந்திய மாணவர் ஒருவர் கூறுகையில், கும்பல் வந்ததும் நாங்கள் கதவுகளை அடைத்து விட்டு விடுதிக்குள் இருந்தோம். கூச்சல்போட்டால் உங்கள் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என்று அவர்கள் மிரட்டினார்கள் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக, 21 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கும்பலின் தலைவராக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாக உக்ரைனில் ஆசியர்கள் மீதும், அவர்கள் தங்கியுள்ள விடுதிகளிலும் தாக்குதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்துஉக்ரைன் அரசு மீது சர்வதேச மனித உரிமைக் கழகம் குற்றம்சாட்டியுள்ளது. மக்களுக்கு உரிய பாதுகாப்புத் தர உக்ரைன் அரசு தவறி விட்டதுஎன்றும் அது கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications