13 நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவில் 13 நாள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை இரவு டெல்லியியிலிருந்து தனி விமானம் மூலமாகஅமெரிக்க்கா புறப்பட்டுச் செல்கிறார்.
நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் புத்தாயிரம் சிறப்பு மாநாடுவெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டில் 150 நாடுகள்கலந்து கொள்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செல்லும் வாஜ்பாயுடன் உ.யர் மட்டக் குழுஒன்றும் செல்கிறது. நியூயார்க் நகரில் நடக்கும் இரவு விருந்தில் வாஜ்பாய் கலந்துகொள்கிறார்.
வெள்ளிக்கிழமை புத்தாயிரம் ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்கிறார் வாஜ்பாய்அன்று மாலை வங்கதேச, நேபாள பிரதமர்களை சந்திக்கிறார்.
சனிக்கிழமை பாரதீய வித்யாபவன் நிகழ்ச்சியிலும், ஆயுர்வேத மாநாட்டிலும் கலந்துகொள்கிறார். ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நியூயார்க் நகரில்தங்கி ஓய்வெடுக்கிறார்.
புதன்கிழமை வாஷிங்டன் செல்கிறார். வியாழக்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின்காங்கிரஸ் சபையில் பேசுகிறார். மூட்டு வலி காரணமாக அமர்ந்து கொண்டே பேசுவார்எனக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வரவேற்புஅளிக்கப்படுகிறது. அதன் பிறகு அமெரிக்க அதிபர் கிளின்டனும் பிரதமர் வாஜ்பாயும்சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். அன்று மாலை அமெரிக்கவெளியுறவுத்துறை அமைச்சர் மெடலீம் ஆல்பிரைட் உள்ளிட்ட அதிகாரிகளும்பிரதமரை சந்தித்து பேசுகின்றனர்,
இதனையடுத்து தேசிய உற்பத்தியாளர்கள், இந்திய தொழில்துறை நடத்துகம்கூட்டங்களில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் சார்பில் சனிக்கிழமை வாஜ்பாய்க்குவரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்திய தூதர் நரேஷ் சந்திரா சார்பிலும் வரவேற்புஅளிக்கப்படுகிறது. பின்னர், மகாத்மா காந்தி சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார்.
17-ம் தேதி கிளின்டன் அளிக்கும் பகல் விருந்தில் கலந்து கொண்ட பின், ஜெர்மனியின்பிராங்க்பர்ட் நகருக்குச் செல்கிறார். அங்கு ஒரு நாள் தங்கிய பிறகு, 18-ம் தேதிஇந்தியா திரும்புகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications