வேலை பார்த்த வங்கியிலேயே ரூ. 25 லட்சம் சுருட்டியவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில், வேலை செய்த வங்கியிலேயே ரூ 25 லட்சம் மோசடி செய்த வங்கி உதவி மேலாளர் புதன்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை எருக்கஞ்சேரியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருபவர் ராம்கோபால். அதே வங்கியில் உதவி மேலாளராகவேலை செய்து வருபவர் டி.என்.பாபு. ராம்கோபால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அந்தப் புகாரில், உதவி மேலாளர் பாபு, வங்கியிலுள்ள பல்வேறு கணக்குகளின் கம்ப்யூட்டர் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, ரூ. 25 லட்சம் வரை மோசடி செய்துஎடுத்துள்ளார். எனவே அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் அடிப்படையில் பாபுவைக் கைது செய்து விசாரிக்கும்படி போலீஸ் கமிஷனர் காளிமுத்து உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்பாலச்சந்திரன், கூடுதல் துணை கமிஷனர் முருகவேல், மத்தியக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பீர்முகமது ஆகியோர் தலைமையிலான போலீஸ் தனிப்படைபாபுவைக் கைது செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+