ராணுவத்தை அனுப்ப மத்திய அரசு தயார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கத் தேவைப்பட்டால், புற ராணுவப் பிரிவான எல்லைப் பாதுகாப்புப் படையை அனுப்ப மத்திய அரசு தயாராகஉள்ளதாக மத்திய அமைச்சர் தனஞ்செய குமார், ஐ.டி.சுவாமி ஆகியோர் கூறியுள்ளனர்.
சென்னை அருகே காரப்பாக்கம் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட சுவாமி பேசுகையில், நடிகர் ராஜ்குமாரை மீட்க இரு மாநிலஅரசுகளும் கோரினால் புற ராணுவப் பிரிவான எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது அதிரடிப்படையை அனுப்ப மத்திய அரசு தயாராக உள்ளதாகத்தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய தனஞ்செயகுமாரும் இதே கருத்தையே உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், எப்போதுமே மாற்று யோசனை ஒன்றைக்கையில் வைத்துக் கொள்வது நல்லது என்றார்.












Click it and Unblock the Notifications