இதுவல்லவோ ஜர்னலிசம் ... இந்தியாவுக்கு சந்திரிகா புகழாரம்
கொழும்பு:
இந்தியப் பத்திரிகையாளர்களைப் பார்த்து இலங்கைப் பத்திரிகையாளர்கள்தைரியத்தயும், தரத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா கூறியுள்ளார்.
சிறு பத்திரிக்கையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இவ்வாறுதெரிவித்தார். சமீபத்தில், சண்டே லீடர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் லலிதாவிக்கிரமசிங்கே, சந்திரிகாவின் புகழைக் குறைக்கும் வகையில் எழுதியததாக் கூறிநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். சந்திராக அரசால் தண்டிக்கப்பட்ட மூன்றாவதுபத்திரிக்கையாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நட்புரீதியிலான செய்தியாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் சந்திரிகா பேசியதாவது:
இலங்கை பத்திரிக்கையாளர்கள் தைரியமாக செயல்படுவதில்லை. அவர்கள்தனியாரிடம் வேலை பார்த்தாலும் அல்லது அரசிடம் வேலை பார்த்தாலும்,அதிகாரிகள் சொல்வது அனைத்தையும் விசாரிக்காமல், உண்மையைஊர்ஜிதப்படுத்தாமல் செய்தி வெளியிடக்கூடாது. ஆராய்ந்து உண்மையானசெய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும்.
அண்டை நாடான இந்தியாவிடமிருந்து பத்திரிக்கை தர்மத்தைப் பற்றி இலங்கைபத்திரிக்கையாளர்கள் கற்க வேண்டும்.
இலங்கையில் உள்ள மற்ற பெண்களைப் போலத்தான் நானும். என் பெயருக்குகளங்கம் விளைவிக்க முயற்சித்ததால் நான் நீதிமன்றத்தின் உதவியை நாடினேன்என்றார் சந்திரிகா.












Click it and Unblock the Notifications