"கம்ப்யூட்டர் தெரியாதவர்கள் படிப்பறிவில்லாதவர்கள்
கோவை:
கம்ப்யூட்டர் கல்வி அறியாதவர்கள் படிப்பறிவற்றவர்களுக்குச் சமம் என கோவையில் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
கோவையில் குறிச்சி மற்றும் பாப்பநாயக்கன்புதூர் ஆகிய இடங்களில் புதிய பள்ளிக் கட்டடங்களை அமைச்சர் துறைமுருகன் திறந்து வைத்து பேசியதாவது:
தி.மு.க ஆட்சியில் எப்போதும் இல்லாத அளவிற்கு கல்வித் துறை முன்னேறியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர்கல்வியை கற்பிக்கவும், மாணவர்களின் பயிற்சிக்காக கம்ப்யூட்டர்களை வழங்கவும் அரசு முடிவு செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
முன்பெல்லாம் தமிழ் தெரியாதவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்ற நிலை இருந்தது. பின்னர் இது ஆங்கிலம் கற்காதவர்கள் எல்லாம்படிப்பறிவில்லாதவர்கள் என்று மாறியது. தற்போது கம்ப்யூட்டர் பற்றித் தெரியாதவர்கள் எல்லாம் படிப்பறிவற்றவர்களுக்குச் சமம் என்ற நிலைஏற்பட்டு வருகிறது.
பொக்ரான் அணு குண்டு வெடிப்பின்போது மற்ற நாடுகள் இந்தியாவிற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தின. இதன்பிறகு முதன் முறையாக இப்போது குளங்களைத் தூர் வார தமிழகத்திற்கு ஜப்பான் அரசு ரூ. 500 கோடிஅனுமதித்துள்ளது.
வறட்சி மாவட்டங்களாகத் திகழும் செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக 3 ஆயிரம்குளங்கள் மற்றும் ஏரிகள் தூர் வாரப்படும்.
மழை நீரைச் சேமிப்பதில் மக்கள் பங்கு மகத்தானதாகும்.
நகராட்சி நிர்வாகங்கள் ஏற்கனவே உள்ள குளங்களை மூடி அதன் மீது கட்டடங்களைக் கட்டி விட்டன. இதனால்நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இனி உள்ள குளங்களையாவது தூர் வாரி செம்மைப் படுத்தஅரசு முன் வர வேண்டும் என்றார் துரை முருகன்.
விழாவில், மாவட்ட கலெக்டர் சந்தானம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications